
சென்னை: ஏப்ரல் 23-
நடிகரும், தவெக தலைவருமான விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய பிறகு விஜய் சந்திக்கும் முதல் தேர்தல் இதுவேயாகும். இதுநாள் வரை நடைபெற்ற தேர்தல்களில் ஒரு நடிகராக வாக்களித்த விஜய், அரசியல் தலைவராக இந்த தேர்தலில் தனது வாக்கினை இன்று பதிவு செய்தார்.
கடந்த தேர்தலில் கருப்பு சிவப்பு நிற சைக்கிளில் வந்து வாக்களித்த விஜய், இந்த முறை தனது பார்சூனர் காரில் வந்து வாக்களித்தார். சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட நீலாங்கரை வாக்குச்சாவடி மையத்தில் விஜய் தனது ஜனநாயக கடைமையை ஆற்றினார். முன்னதாக விஜய் வாக்குச்சாவடிக்கு வருகை தந்த போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். இந்த தேர்தலில் விஜய்யின் தவெக இந்த தேர்தலில் 233 தொகுதிகளில் தனித்து களம் காண்கிறது. சேலம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரை எல்லாம் முடிந்த நிலையில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. காலை முதலே வாக்காளர்களும் விறுவிறுப்புடம் தங்களது வாக்கினை செலுத்தி வருகிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர், நடிகைகள் என பலரும் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள். குறிப்பாக நடிகர் அஜித்குமார் காலை 6.30 மணிக்கே வாக்குச்சாவடிக்கு வந்து காத்திருந்து முதல் வாக்காக பதிவு செய்துவிட்டு சென்றார். அரசியல் தலைவராக விஜய் இதேபோல் சீமான், நடிகர் கவுதம் கார்த்திக், சுந்தர் சி, குஷ்பு, ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் என பலரும் தங்களது வாக்கினை செலுத்தினர். முதல் முறையாக விஜய் இன்று அரசியல் தலைவராக தனது வாக்கினை செலுத்தினார். காலை 8 மணியளவில் வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட விஜய், நீலாங்கரை வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய பிறகு விஜய் சந்திக்கும் முதல் தேர்தல் இதுவேயாகும். இதுநாள் வரை நடைபெற்ற தேர்தல்களில் ஒரு நடிகராக வாக்களித்த விஜய், அரசியல் தலைவராக இந்த தேர்தலில் தனது வாக்கினை இன்று பதிவு செய்தார். தவெக தலைவர் விஜய் வாக்களிக்க வந்த போது அங்கு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளுவில் வாக்குச்சாவடி முன்பாக போடப்பட்டு இருந்த சமியானா பந்தலும் சரிந்தது. விஜய்யை பார்க்கவும் அவரை படம் பிடிக்கவும் முண்டியடித்ததால், வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. விஜய்யுடன் இருந்த தனி பாதுகாவலர்கள் மற்றும் போலீசார் அவரை பத்திரமாக காருக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து, விஜய் தனது வாக்கினை செலுத்திவிட்டு சென்றார்.


















