Home செய்திகள் தேசிய செய்திகள் நாசிக் டிசிஎஸ் மதமாற்ற வழக்கு நிதா கான் ஜாமீன் வழக்கு விசாரணை

நாசிக் டிசிஎஸ் மதமாற்ற வழக்கு நிதா கான் ஜாமீன் வழக்கு விசாரணை

நாசிக்: ஏப்ரல் 27-
நாசிக் டிசிஎஸ் பிபிஓ அலுவலகத்தில் நடைபெற்ற பாலியல் தொல்லை மற்றும் மதமாற்ற கட்டாயப்படுத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நிதா கானுக்கு இடைக்கால கைது தடை வழங்க மறுத்துவிட்டது. இந்த வழக்கில் நிதா கான் மற்றும் போலீஸ் தரப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. டாடா கல்​சல்​டன்சி சர்​வீசஸ் ​(டிசிஎஸ்) நிறு​வனத்​தின் நாசிக் கிளை​யில் ஊழியர்​கள் சிலர் தங்​களுக்கு கீழ் பணி​யாற்​றும் நபர்​களுக்கு பாலியல் தொந்​தரவு மற்​றும் மதமாற்​றம் செய்​ய​ முயன்றதாக குற்​றச்சாட்டு எழுந்​தது. இதுதொடர்​பாக 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வரு​கின்​றனர்.
இந்த விசா​ரணை​யில் டிசிஎஸ் ஊழியர் ஒரு​வர் கூறுகையில், எங்​கள் அலு​வல​கத்​தில் பணி​யாற்​றிய தவுசிப் பிலால் அத்​தர் என்ற சீனியர் ஊழியர் என்​னுடன் நட்​பாக பழகி​னார். பின்​னர் ரம்ஜான் பண்​டிகைக்​காக தனது வீட்​டுக்கு விருந்​துக்கு அழைத்​தார். நான் சென்ற​போது எனக்கு முதலில் சேமியா பாயாசம் வழங்​கினர். அதை சாப்​பிட்​டதும், போதைப் பொருள் சாப்​பிட்​டது ​போல் குழப்​ப​மான மனநிலைக்கு சென்​றேன். எனது குடும்​பத்​தில் உள்ள பிரச்சனை​களை கேட்​டறிந்த தவுசிப், அவற்றை பில்லி சூனி​யம் மூலம் சரி செய்து விடலாம் என கூறி​னார். பின்​னர் எனக்கு குல்லா அணி​வித்து படம் பிடித்​து, அந்த போட்​டோவை அலு​வலக நண்​பர்​களின் வாட்ஸ் அப் குழு​வில் பதிவேற்றினார். என்​னுடன் நட்​பாக பழகி​னாலும், எனது பணித் திறன் மோச​மாக இருப்​ப​தாக மேல் அதிகாரி​களுக்கு அனுப்​பி, என்னை நிலைகுலைய செய்​து, நான் அவர்​களை எப்​போதும் சார்ந்​திருக்​கும்​படி​யான நிலைக்கு கொண்டு வந்​தார் எனத் தெரி​வித்​தார்.
இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்​ட​வர்​கள் 29 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் அனுப்பப்​பட்​டுள்​ளனர். அதன்படி தவுசிப் பிலால், அத்​தர், டேனிஷ் ஷேக், ஷாருக் உசேன், ரஷா ரஃபிக் மேமன் ஆகியோரை மும்பை போலீ​ஸார் காவலில் எடுத்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இந்த மனுவை விசாரித்த கூடு​தல் அமர்வு நீதிபதி கே.ஜி.ஜோஷி, நீடா கானுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார். இந்த வழக்​கில் போலீஸ் தரப்​பினரும், புகார்​தா​ரரும் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதிக்​குள் பதில் அளிக்க வேண்​டும் என்று உத்​தர​விட்​டார். இதைத் தொடர்ந்து தலைமறை​வாக உள்ள நீடா கானை கைது செய்ய போலீ​சார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.