Home மாவட்டங்கள் திருவண்ணமாலை சித்ரா பவுர்ணமி திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

சித்ரா பவுர்ணமி திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

திருவண்ணாமலை: மே 1-
சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்கிறார்கள். இந்தநாளில் அண்ணாமலையாரை நினைத்து கிரிவலம் வந்தால் புண்ணியம் தரும் என்பது ஐதீகம்.
பஞ்சபூதங்களில் அக்னி தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில். நினைத்தாலே முக்தி தரும் தலம் என்ற பெருமைக்குரியது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பல கோடி பக்தர்கள் இந்த அண்ணாமலையாரை தரிசித்து வருகிறார்கள்.
திருவண்ணாமலையில் சிவபெருமானே மலையாக இருப்பதாக நம்பிக்கை. அதனால் கோயிலை சுற்றுவது போல் மலையை வலம் வருகிறார்கள். சுமார் 14 கீ.மீ. தூரம் கொண்ட திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 8 லிங்கங்கள் உள்ளன. இவற்றிற்கு அஷ்டலிங்கங்கள் என பெயர். இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகிய லிங்கங்களை தரிசித்து ஓம் நவசிவாய என 5 எழுத்து மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மலை 260 கோடி ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள். திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலம் வந்தாலும், கார்த்திகை தீபம், சித்ரா பவுர்ணமி உள்ளிட்டவைகளுக்கு லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் மேற்கொள்வர். அந்த வகையில் இந்த ஆண்டு இன்று சித்ரா பவுர்ணமியாகும். ஆண்டுதோறும் 12 பவுர்ணமிகளிலும் விரதம் இருந்து கிரிவலம் வந்த பலனை ஒரே நாளில் தரக் கூடியது இந்த சித்ரா பவுர்ணமியாகும். இந்த நாளில் கிரிவலம் செல்வதால் செல்வச் செழிப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
சித்ரா பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது என்பதை பார்க்கலாம். பவுர்ணமி திதி ஏப்ரல் 30ஆம் தேதி இரவு 9.51 மணிக்குத் தொடங்கி இன்று இரவு 11.07 மணிக்கு முடிகிறது. கிரிவலத்தை தொடங்கும் நேரம் நேற்று இரவு 9.12 மணிக்கு, முடிவடையும் நேரம் இன்று இரவு 10.52 மணியாகும்.