Home மாவட்டங்கள் பெங்களூர் வேகமெடுத்த பெங்களூர் 2வது விமான நிலையம்.. களமிறங்கிய சிங்கப்பூர் நிறுவனம்

வேகமெடுத்த பெங்களூர் 2வது விமான நிலையம்.. களமிறங்கிய சிங்கப்பூர் நிறுவனம்

பெங்களூர்: மே 1-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கு போட்டியாக கர்நாடகா அரசு பெங்களூரில் 2வது விமான நிலையம் அமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் பெங்களூரில் 2வது விமான நிலையத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள சிங்கப்பூரை அடிப்படையாக கொண்ட மெயின்ஹார்ட்-கேபிஎம்ஜி (Meinhardt-KPMG) நிறுவனத்தை ஒப்பந்தம் செய்துள்ளது.
கர்நாடகா- தமிழ்நாடு எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன. இதனால் அங்கு புதிதாக விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் ஓசூர் வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது.
ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் பட்சத்தில் அதன் அருகே உள்ள பெங்களூரில் முதலீடுகள் குறையலாம். அதேபோல் பெங்களூரில் நிலவும் போக்குவரத்து நெரிசல், இடநெருக்கடியால் பல நிறுவனங்கள் ஓசூருக்கு இடம்பெயர வாய்ப்புள்ளது. இது கர்நாடகாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஓசூர் விமான நிலையத்துக்கு போட்டியாக பெங்களூரில் 2வது விமான நிலையம் அமைக்க கர்நாடகா அரசும் திட்டமிட்டு வருகிறது. 3 இடங்கள் தேர்வு பெங்களூரில் ஏற்கனவே கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. தற்போது 2வது விமான நிலையம் அமைப்பதற்காக 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி கனகபுரா ரோட்டின் அருகே ககலிபுரா, ஹாரோஹள்ளி, நெமலங்களா – குனிகல் ரோட்டில் உள்ள சிக்கசோலூர் உள்ளிட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட 3 இடங்களில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கர்நாடகா தொழில் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (KSIIDC) சார்பில் இந்த ஒப்பந்தம் மெயின்ஹார்ட்-கேபிஎம்ஜி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.