Home செய்திகள் தேசிய செய்திகள் ஐபிஎல் சூதாட்ட புகார்.. சிறையில் தன் உயிரை காப்பாற்றிய மனைவி.. ஸ்ரீசாந்த் பரபரப்பு புகார்

ஐபிஎல் சூதாட்ட புகார்.. சிறையில் தன் உயிரை காப்பாற்றிய மனைவி.. ஸ்ரீசாந்த் பரபரப்பு புகார்

திருவனந்தபுரம், ஜூன் 19- கேரளா எக்ஸ்பிரஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கி சிறைக்குச் சென்றார்.
இந்த இக்கட்டான சூழலில் போது, தனது மனைவி புவனேஸ்வரி தனக்கு அளித்த ஆதரவைப் பற்றி உருக்கமாகப் பேசிள்ளார். அந்த இக்கட்டான சூழ்நிலையில் தனது மனைவி கொடுத்த தைரியமே தன்னை தற்கொலை முடிவில் இருந்து காப்பாற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது, ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் புகாரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித் சவான் மற்றும் அஜித் சண்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பிசிசிஐ ஸ்ரீசாந்திற்கு வாழ்நாள் தடை விதித்தது.
பின்னர் இந்தத் தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வழக்கு காலத்தில் உறுதுணையாக நின்ற மனைவி இது குறித்து நேர்காணலில் பேசிய ஸ்ரீசாந்த், தனது வாழ்வின் மிகக் கொடூரமான காலகட்டத்தைக் கடக்க உதவிய தன் மனைவி புவனேஸ்வரி குறித்துப் பேசினார். “நான் சிறையில் இருந்தபோது, தற்கொலை செய்து கொள்ளாமல் இருந்ததற்கு மிக முக்கியக் காரணங்களில் ஒன்று அவர்தான். 2011 உலகக் கோப்பையை நாம் வென்றுவிட்டால், உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று 2010-ல் அவரிடம் நான் வாக்குறுதி அளித்திருந்தேன்,” என்று ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டின் ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றை வென்ற இந்திய அணியில் ஸ்ரீசாந்த் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தார். 43 வயதான ஸ்ரீசாந்த், 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 87 விக்கெட்களும், 53 சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடி 75 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.