Home செய்திகள் தேசிய செய்திகள் 2 வங்கதேச பெண்கள் கைது

2 வங்கதேச பெண்கள் கைது

திருவனந்தபுரம்: மே 1-
கேரள மாநிலம் திரு​வனந்​த​புரம் அருகே உள்ள காரிய​வட்​டத்​தில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 2 வங்கதேச பெண்கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.
கேரள தீவிர​வாத எதிர்ப்புப் படை​யினருக்கு (ஏடிஎஸ்) கிடைத்த ரகசி​யத் தகவலின் அடிப்​படை​யில், திரு​வனந்​த​புரத்​தின் கழக்கூட்டம் காவல் துறை​யினர் காரிய​வட்​டத்​தில் உள்ள ஒரு வாடகை வீட்​டில் புதன்​கிழமை இரவு சோதனை நடத்​தினர். அப்போது சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 2 வங்​கதேச பெண்​கள் கைது செய்​யப்​பட்​டனர்.
கடந்த ஒரு மாத​மாக திரு​வனந்​த​புரத்​தில் தங்​கி​யிருந்த இந்த 2 பெண்​களும், ஒரு பாலியல் கும்​பலுக்​காக வேலை செய்து வந்ததாக காவல்​துறை கூறி​யுள்​ளது. இந்த சோதனை​யின்​போது, அந்த 2 வங்​கதேசப் பெண்கள் தவிர, அங்​கிருந்த மேலும் 6 பேரை போலீ​ஸார் விசா​ரணைக்​காக அழைத்​துச் சென்​றனர்.
தனித்தனி வழக்குகள் இந்​தக் குழு​வினர் இந்த மாத தொடக்கத்தில் தங்​களை ‘மருத்​து​வர்​கள்’ என்று பொய்​யாகக் கூறி அந்த வீட்டை வாடகைக்கு எடுத்​துள்​ளது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, 2 வங்கதேசப் பெண்கள் மீதும் சட்டவிரோதமாக தங்கியதற்கும், மற்றொன்று பாலியல் நடவடிக்கைகள் தொடர்பாகவும் என தனித்தனி வழக்குகள்
பதிவு செய்யப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.