
கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே விளையாடச் சென்ற 4 வயது சிறுவன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் உள்ளே சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கழுகூர் கிராமத்தில் கார் கவருக்குள் எதிர்பாராத விதமாக சிக்கிய சிறுவன் சஞ்சீவி காருக்குள்ளேயே துடிதுடித்து உயிரிழந்தது அந்தப் பகுதியையே நிலைகுலைய வைத்துள்ளது.. தற்போது தோகைமலை போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக சட்டசபை தேர்தல் 2026 தகவல்களுக்கு ஒன்இந்தியா தமிழுடன் இணைந்திருங்கள் கழுகூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலு.. 36 வயதான இவர் கட்டிட வேலை அதாவது கொத்தனார் வேலை செய்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் மாரிஸ்வரி.. 30 வயதான இவர் கட்டிட வேலையில் சித்தாள் பணியில் இருந்து வருகிறார் கரூர் காரில் சிறுவன் இந்த தம்பதிக்கு சஞ்சீவி என்ற 3 வயது மகன் இருந்தார்.. நேற்று காலை 9 மணி அளவில் சஞ்சீவி தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தான்.. அப்போது அங்கு ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது.. அந்த காருக்கு முழுமையாக கவர் போடப்பட்டிருந்துது.. விளையாடிக் கொண்டிருந்த சஞ்சீவி, திடீரென கார் கவருக்குள் புகுந்து விட்டான்.. யாருக்கும் தெரியாமல் காரின் கதவையும் திறந்து உள்ளே சென்று உட்கார்ந்து கொண்டான்.. சிறுவன் உள்ளே சென்ற சில நிமிடங்களிலேயே எதிர்பாராத விதமாக காரின் கதவுகள் தானாக பூட்டிக் கொண்டன. மூடப்பட்ட காரின் கவர் காரின் மேல் தடிமனான பிளாஸ்டிக் கவர் போர்த்தப்பட்டிருந்ததால், உள்ளே இருந்த சிறுவனால் கதவை மீண்டும் திறக்க முடியவில்லை.. அதுமட்டுமில்லாமல், கார் கவர் முழுமையாக மூடியிருந்ததால் காருக்குள் காற்றோட்டமின்றி ஆக்சிஜன் அளவு வேகமாகக் குறைந்தது.. போதிய காற்று கிடைக்காமல் காருக்குள்ளேயே அந்த பிஞ்சு உயிர் தவித்துள்ளது..


















