
சென்னை: ஏப்ரல் 4-
70 ஆண்டு கால திமுக அதிமுக கோட்டைகளை தகர்த்து ஆட்சியைப் பிடிக்கிறார் தளபதி விஜய். தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நிகழாத மாபெரும் திருப்பம் இன்று நடந்தது. அதாவது ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் பரிசு பொருட்கள் கொடுக்காமல் இளைய தளபதி விஜய் அவர்களின் தமிழக வெற்றி கழகம் மக்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்றுள்ளது. இன்று மதியம் நிலவரப்படி 110 தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலையில் உள்ளது. இன்று மாலைக்குள் ஆட்சி அமைக்க தேவைப்படும் மெஜாரிட்டி இடங்களான 118 இடங்களை தமிழக வெற்றிக்கழகம் கைப்பற்றி தனி பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது. தமிழக வெற்றி கழகம் கட்சியின் வேட்பாளர் யார் அவரது பெயர் என்ன அவர் என்ன ஜாதி? என்ன மொழி என்று பார்க்காமல் விஜய் என்ற ஒற்றை தலைவரின் பேச்சைக் கேட்டு அவர் முகத்தைப் பார்த்து விசில் சின்னத்திற்கு மக்கள் வாக்களித்துள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது. தமிழக வெற்றி கழக கட்சிக்கு அடுத்தபடியாக அதாவது இரண்டாம் இடத்தில் இன்று மதியம் நிலவரப்படி அதிமுக 71 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
ஆட்சி கட்டிலில் அமர்ந்திருந்த திமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இன்று மதியம் நிலவரப்படி திமுக வெறும் 54 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. அதுமட்டுமல்ல முதலமைச்சர் மு க ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்கள் கே என் நேரு துரைமுருகன் கீதா ஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன் சேகர்பாபு மா சுப்பிரமணியன் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் திமுக முக்கிய தலைவர்கள் பின்தங்கி உள்ளனர். கடந்த 70 ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்டமைப்பை வலுவாக அமைத்து அரசியல் புலிகளாக திமிங்கலங்களாக செயல்பட்டு வந்த திமுக அதிமுக என்ற இரண்டு கட்சிகளையும் தான் கட்சி தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் இளைய தளபதி விஜய் தகர்த்து எறிந்து உள்ளார். சென்னை முதல் கன்னியாகுமரி வரை அவருக்கு ஏகோபித்த ஆதரவை மக்கள் அளித்து உள்ளனர். அதாவது அதிகார பலம் ஊடக பலம் பண பலம் அராஜகம் போன்ற எதுவும் இல்லாமல் இளைய தளபதி விஜய் இதை அமைதியாக சாதித்து உள்ளார். அதாவது அவரது திரைப்படத்தில் வரும் ஒரு விரல் புரட்சி இப்போது உண்மையில் நடந்துள்ளது. அவரது சமீபத்திய படமான ஜனநாயகன் என்ற தலைப்புக்கு ஏற்றவாறு இப்போது ஜனங்களுக்கு நாயகனாக தமிழ் மக்களுக்கு அதிகாரப்பூர்வ தலைவனாக மக்களின் ஆதரவோடு உயர்ந்து இருக்கிறார்.வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றி கழகம் 100 இடங்களை தாண்டி முன்னிலை பெற்றதை தொடர்ந்து அரசு உயர் அதிகாரிகள் போலீஸ் உயர் அதிகாரிகள் விஜய் வீட்டிற்கு படையெடுக்கத் தொடங்கினர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி ஒரு திருவிழா போல் கொண்டாடினர். தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகம் ஆந்திரா, கேரளா மகாராஷ்டிரா உளித்த பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் விஜய் வெற்றியை அவரது ரசிகர்கள் தொண்டர்கள் உற்சாகமுடன் கொண்டாடி வருகின்றனர். தமிழக அரசியல் வரலாற்றில் விஜய் ஒரு புதிய சாதனை படைத்து இருக்கிறார். யாராலும் தொட முடியாத திராவிட கோட்டைகளை
அவர் தகர்த்து
உள்ளார். விஜய்க்கு
வாழ்த்துக்கள்
குவிந்த
வண்ணம்
உள்ளது.


















