Home செய்திகள் தேசிய செய்திகள் மற்ற மாநிலங்களில் நடந்த சம்பவங்களும் உச்ச நீதிமன்ற உத்தரவும்

மற்ற மாநிலங்களில் நடந்த சம்பவங்களும் உச்ச நீதிமன்ற உத்தரவும்

புதுடெல்லி, மே 8- தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 108 தொகுதிகளைப் பெற்ற தவெக தலை​வர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர்​ அர்​லேக்​கர் அழைப்பு விடுக்கவில்லை. இதனால் குழப்பம் நிலவுகிறது. இது​போன்ற சர்ச்​சைகளின் போது, எஸ்​.ஆர்​.பொம்மை வழக்​கில் உச்ச நீதி​மன்​றத்​தின் வரலாற்​றுச் சிறப்​புமிக்க தீர்ப்பே பெரிதும் விவா​திக்​கப்​படு​கிறது. கடந்த 1994-ல் வழங்​கப்​பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்​பில், ஒரு ஆட்​சிக்​குப் பெரும்​பான்மை ஆதரவு உள்ளதா என்​பதை சட்​டப்​பேர​வை​யில்​தான் அறிய முடி​யும். ஆளுநர் மாளி​கை​யில் இல்​லை. பெரும்​பான்மை ஆதரவு உள்​ளதா என்​ப​தை, ஆளுநர் தனது தனிப்​பட்ட விருப்பு வெறுப்​பு​களின் அடிப்​படை​யிலோ அல்​லது சொந்​தக் கணிப்​பின் அடிப்படையிலோ தீர்​மானிக்க இயலாது என்று உறு​திபடக் கூறியிருந்​தது. அதன்​பின்​னர், பெரும்​பான்​மையை நிரூபிக்​கும் விவ​காரத்​தில் சட்​டப்​பேர​வை​யில் வாக்​கெடுப்பு நடத்தி முடிவு எடுப்​பது என்றானது. நம்​பிக்கை வாக்​கெடுப்பு இந்​திய அரசி​யலில் ஒரு அரசியலமைப்பு மரபாக மாறியது. பிறகு கர்​நாட​கா, மகாராஷ்டிரா, உத்​த​ராகண்ட் மற்​றும் மத்​திய பிரதேசம் போன்ற பல வழக்​கு​களில், உச்ச நீதி​மன்​றம் பொம்மை தீர்ப்பை மேற்கோள் காட்​டி, உடனடி நம்​பிக்கை வாக்​கெடுப்பு நடத்த உத்தர​விட்​டதும் நடந்​தேறின. இதற்கு பல முன் உதா​ரணங்​கள் உள்​ளன.
கடைசி​யாக மகா​ராஷ்டி​ரா​வில் கடந்த 2019-ல் நடை​பெற்ற தேர்​தலில் பாஜக தனிப்பெரும் கட்​சி​யானது. அப்​போது, சிவசே​னா​வில் உரு​வானப் பிளவு பாஜக கூட்​ட​ணி​யின் பெரும்​பான்​மைக் கணக்​கீடு​களைக் குழப்​பியது. எனினும் தேவேந்​திர பட்​னா​விஸ் மற்​றும் அஜித் பவார் ஆகியோர் திடீரென பதவி​யேற்​றனர். தங்​களுக்கு என்​சிபி​யின் ஆதரவு இருப்​ப​தாக இவர்​கள் கூறியதை எதிர்க்​கட்​சிகள் எதிர்த்​தனர். உச்ச நீதி​மன்​றம் உடனடி​யாக நம்​பிக்கை வாக்​கெடுப்பு நடத்த உத்​தர​விட்​டது.