
திருப்பதி: மே 12-
திருப்பதி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோவிந்தராஜர் திருக்கோயில் மிகவும் பிரபலமானது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முக்கிய கோயில்களில் ஒன்றான இக்கோயிலில் வரும் மே.23-ம் தேதி முதல் மே.31-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்களுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.இதில் காலை 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் பிறகு இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் வாகன சேவைகள் நடைபெறும். இதில் முக்கியமாக மே.27-ம் தேதி இரவு கருட சேவையும் 30-ம் தேதி காலை தேர்த் திருவிழாவும், 31-ம் தேதி காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சியும் நடைபெறும்.





















