Home செய்திகள் தேசிய செய்திகள் அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்

அகிலேஷ் யாதவின் சகோதரர் பிரதீக் யாதவ் காலமானார்

லக்னோ: மே 13-
சமாஜ்வாடி கட்சியின் மறைந்த நிறுவன தலைவர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவ் தனது 38 வயதில் லக்னோவில் திடீரென்று காலமானார். உடல்நலக்குறைவால் மே 13ல் லக்னோ சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார். நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனையால் நீண்டகாலமாக அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் காலமானார். இவர் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் சகோதரர் ஆவார்.
பிரதீக் யாதவின் மனைவி பெயர் அபர்ணா. இவர் பாஜகவில் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.