Home விளையாட்டு எந்த அணி​யும் 100% முழுமையானது இல்லை: ரஷித் கான்

எந்த அணி​யும் 100% முழுமையானது இல்லை: ரஷித் கான்

அகம​தா​பாத், மே 23- ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணியை 89 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி. இந்த ஆட்​டத்​தில் 230 ரன்​கள் இலக்கை துரத்​திய சிஎஸ்கே அணி 13.4 ஓவர்​களில் 140 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. குஜ​ராத் அணி​யின் பந்​து​வீச்​சில் முகது சிராஜ், காகிசோ ரபா​டா, ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். குஜ​ராத் அணிக்கு இது 9-வது வெற்​றி​யாக அமைந்​தது. இதன் மூலம் அந்த அணி லீக் சுற்றை முதல் 2 இடங்​களுக்​குள் நிறைவு செய்​வதை உறுதி செய்​துள்​ளது. ஏனெனில் குஜ​ராத் அணி​யின் நிகர ரன் ரேட் 0.695 ஆக உள்​ளது. 14 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள குஜ​ராத் அணி 9 வெற்​றி, 5 தோல்வி​களு​டன் 18 புள்​ளி​களு​டன் லீக் சுற்றை நிறைவு செய்​துள்​ளது. அதேவேளை​யில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே அணி இந்த தோல்​வி​யால் பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறும் வாய்ப்பை இழந்​தது. அந்த அணி 14 ஆட்​டங்​களில் 6 வெற்​றி, 8 தோல்வி​களு​டன் 12 புள்​ளி​களு​டன் லீக் சுற்றை முடித்​துள்​ளது. சிஎஸ்கே அணிக்கு எதி​ரான வெற்​றிக்கு பின்​னர் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யின் சுழற்​பந்து வீச்​சாள​ரான ரஷித் கான் கூறிய​தாவது: ஒவ்​வொரு அணிக்​கும் மேம்​படுத்த வேண்​டிய சில சிறிய விஷ​யங்​களும் இருக்​கும், அதே நேரத்​தில் மிக​வும் வலு​வான சில பகு​தி​களும் இருக்​கும். எந்த அணி​யும் 100 சதவீதம் முழு​மை​யான, கச்​சித​மான அணி​யாக இருக்க முடி​யாது. உங்​களிடம் எவ்​வளவு சிறந்த வீரர்​கள் இருக்​கிறார்​கள் என்​பது முக்​கியமல்ல. இந்​தத் தொடர் முழு​வதும் எங்​களது நடு​வரிசை பேட்​டிங் குறித்து நிறைய விவாதங்​கள் நடந்​துள்​ளன. ஆனால், இப்​போது ஒவ்​வொரு வீரரும் தங்​கள் பொறுப்பை உணர்ந்து சிறப்​பாகச் செயல்​பட்டு வரு​கிறார்​கள். ஒவ்​வொரு​வரும் தங்​களது பொறுப்பை ஏற்​றுக்​கொள்​கிறார்​கள், அது​தான் மிக​வும் முக்​கி​யம். துல்​லிய​மாக இல்​லாத அந்த 10 சதவீதம் அல்​லது 15 சதவீத விஷ​யங்​களைப் பற்​றியே சிந்​தித்​துக் கொண்​டிருந்​தால், அது மீத​முள்ள 70 முதல் 75 சதவீத அல்​லது 80 சதவீத விஷ​யங்​களை​யும் நிச்​ச​யம் பாதிக்​கும். எங்​களைப் பொறுத்​தவரை, நாங்​கள் விஷ​யங்​களை மிக​வும் எளிமை​யாக வைத்​திருக்​கிறோம். எதிரணி யாராக இருந்​தா​லும் சரி, களத்​தில் யாருக்கு வாய்ப்பு கிடைத்​தா​லும் சரி, எவ்​வாறு அதிக தாக்​கத்தை ஏற்​படுத்​தப் போகிறோம் என்​பது​தான் முக்​கி​யம். அது பேட்​டிங், பந்​து​வீச்சு அல்​லது ஃபீல்​டிங் என எது​வாக​வும் இருக்​கலாம். எனவே எங்கே பலவீன​மாக இருக்​கிறோம், எங்கே வலு​வாக இருக்​கிறோம் என்​ப​தைப் பற்றி அதி​கம் யோசிக்க வேண்​டாம். நமக்கு முன்​னால் என்ன இருக்​கிறது, அணிக்கு நான் எப்​படி சிறப்​பாகச் செய்ய முடி​யும் என்​ப​தைப் பற்றி மட்​டுமே யோசிக்க வேண்​டும்.