Home விளையாட்டு பிரெஞ்சு ஓபன் டென்​னிஸ் போட்டி: அலெக்​சாண்​டர் ஜிவேரேவ் முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்​னிஸ் போட்டி: அலெக்​சாண்​டர் ஜிவேரேவ் முன்னேற்றம்

பாரிஸ், மே 25- பிரெஞ்சு ஓபன் டென்​னிஸ் போட்​டி​யின் ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றுக்கு ஜெர்​மனி வீரர் அலெக்​சாண்​டர் ஜிவேரேவ் முன்​னேறி​யுள்​ளார். ஆண்​டின் 2-வது கிராண்ட் ஸ்லாம் தொட​ரான பிரெஞ்சு ஓபன் டென்​னிஸ் பாரிஸ் நகரில் நேற்று கோலாகல​மாகத் தொடங்​கியது. களிமண் தரை​யில் விளை​யாடப்​படும் இந்த தொடர் வரும் ஜூன் 7-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. மதிப்​புமிக்க இந்​தத் தொடரில் ஆடவர், மகளிர் ஒற்​றையர் பிரி​வில் உலகின் முன்​னணி வீரர், வீராங்​க​னை​கள் கலந்து கொண்டு பட்​டம் வெல்ல மோத உள்​ளனர். நேற்று நடை​பெற்ற ஆடவர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில், தரவரிசை​யில் 2-வது இடத்​தில் இருப்​பவ​ரான அலெக்​சாண்​டர் ஜிவேரே​வும், பிரான்ஸ் நாட்​டின் பெஞ்​சமின் போன்​ஸி​யும் மோதினர். இதில் ஜிவேரேவ் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்​களில் பெஞ்​சமினை வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். தரவரிசை​யில் 13-வது இடத்​தில் உள்ள ரஷ்ய வீரர் கரண் கச்சனோவ் 6-3, 7-6 (7/3), 6-0 என்ற செட் கணக்​கில் பிரான்ஸ் நாட்டின் ஆர்​தர் கியா​வைத் தோற்​கடித்​தார்.செர்​பி​யா​வின் மியோமிர் கெக்​மனோவிக் 7-6 (7/0), 6-3, 6-4 என்ற கணக்​கில் ஹங்​கேரி​யின் பேபியன் மரோ​சானை​ வீழ்த்​தி​னார். ஆஸ்​திரேலி​யா​வின் ஜேம்ஸ் டக்​வொர்த், கனடா​வின் கேப்​ரியல் டியாலோ மோதிய ஆட்​டத்​தில் டக்​வொர்த் 6-3, 4-1 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் இருந்​த​போது டியாலோ காயம் காரண​மாக வில​கி​னார். இதையடுத்து ஜேம்ஸ் டக்​வொர்த் வெற்றி பெற்​ற​தாக அறிவிக்​கப்​பட்​டார். அர்​ஜெண்​டி​னா​வின் தியாகோ திரான்டே 6-3, 7-6 (8/6), 6-7 (5/7), 6-0 என்ற செட் கணக்​கில் ஸ்பெ​யினின் பப்லோ லியாமஸ் ரூஸைுயும், அர்​ஜெண்​டி​னா​வின் மார்க்கோ டிரங்​கெலிட்டி 6-4, 6-2, 6-2 என்ற செட் கணக்​கில் பிரான்​ஸின் கியாரின் ஜாக்​வெட்​டை​யும் சாய்த்​தனர். பெலிண்டா அபாரம்: மகளிர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில், தரவரிசை​யில் 11-வது இடத்​தில் உள்​ளவரும், சுவிட்​சர்​லாந்து வீராங்​க​னை​யு​மான பெலிண்டா பென்​கிக் 6-2, 6-3 என்ற நேர் செட் களில் ஆஸ்​திரிய வீராங்​கனை சின்ஜா கிராஸை சாய்த்து அடுத்த சுற்​றுக்கு முன்​னேறி​னார். போட்​டித் தரவரிசை​யில் 32-வது இடத்​தில் இருப்​பவ​ரான சீனா​வின் வாங் ஜின்யு 6-3, 3-6, 6-4 என்ற செட் கணக்​கில் ஆஸ்​திரி​யா​வின் லில்லி டேகரை​யும், அமெரிக்​கா​வின் கேட்டி மெக்​நல்லி 3-6, 7-6 (7/5), 6-3 என்ற செட் கணக்​கில் ஆஸ்​திரேலிய வீராங்​கனை அஜிலா டோமல்​ஜானோவிக்​கை​யும் வென்​றனர்.போட்டித் தரவரிசை​யில் 15-வது இடத்​தில் உள்ள உக்​ரைனின் மார்ட்டா கோஸ்ட்​யுக் 6-2, 6-3 என்ற கணக்​கில் ஸ்பெ​யினின் ஒக்​சானா செலக்​மெட்​டே​வாவை​யும், அமெரிக்​கா​வின் கேட்டி வோலிநெட்ஸ் 6-3, 6-1 என்ற செட் கணக்​கில் பிரான்​ஸின் கிளாரா புரலை​யும், தரவரிசை​யில் 27-வது இடத்​தில் இருக்​கும் செக் குடியரசு வீராங்​கனை மேரி போஸ்​கோவா 6-3, 6-1 என்​ற செட்​ கணக்​கில்​ லூசி​யா பிரான்​ஜெட்​டியையும்​ வீழ்​த்​தினர்​.