
டெல்லி, மே 25- நாடு முழுவதும் இன்னும் 5 நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. கோடை வெளியில் காரணமாக நாடு முழுவதுமே குறிப்பாக வடமாநிலங்களில் வெப்ப அலை மிகவும் கடுமையாக இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை இல்லாத வகையில் வடமாநிலங்களில் வெப்ப அலை மிகவும் மோசமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெப்ப அலை காரணமாக தெலுங்கானாவில் கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 51 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனிடையே கோடை வெப்பத்தின் தொடர்ச்சியாக மேலும் சில நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.



















