Home செய்திகள் தேசிய செய்திகள் மாணவர்களை பாகிஸ்தானியர்கள் என்று கூறியதற்கு கார்கே கண்டனம்

மாணவர்களை பாகிஸ்தானியர்கள் என்று கூறியதற்கு கார்கே கண்டனம்

புதுடெல்லி, ஜூன் 1- சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு மதிப்​பீட்டு விவகாரத்தில், மாணவர்​களை பாகிஸ்​தானியர்​கள் என்று ட்ரோல் செய்​ததற்கு காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். அண்​மை​யில் வெளி​யான பிளஸ்-2 மாணவ, மாணவி​களின் சிபிஎஸ்இ தேர்வு விடைத்​தாள் மதிப்​பீட்டு குளறு​படிகளை சமூக வலைத்​தளத்​தில் சுட்​டிக்​காட்​டிய டெல்லி மாணவர் வேதாந்த் ஸ்ரீவஸ்​தவா என்​பவர், ‘பாகிஸ்​தானியர்’ மற்​றும் ‘தேச​ விரோ​தி’ என்று சமூக வலைதள பயனர்​களால் கடுமை​யாகக் கேலி செய்யப்​பட்​டார். சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு​களில் ‘ஓஎஸ்​எம்’ முறை காரண​மாக தங்​களுக்​குக் குறை​வான மதிப்​பெண்​கள் வழங்கப்பட்​டுள்​ள​தாகச் சில மாணவர்​கள் குற்​றம் சாட்டியிருந்தனர்.மேலும், டெல்லி மாணவர் வேதாந்த், மறு மதிப்பீட்​டுக்கு விண்​ணப்​பித்​த​போது அவருக்கு வழங்​கப்​பட்ட விடைத்​ தாள் நகல் தன்​னுடையது அல்ல என்​றும், அதில் உள்ள கையெழுத்து தன்​னுடைய கையெழுத்​து இல்லை என்​றும் குற்றம்சாட்​டி​னார். இதைத் தொடர்ந்​து, வேதாந்​தின் கணக்கு பாகிஸ்​தானில் இருந்து இயக்​கப்​படு​வ​தாக சமூக ஊடகங்​களில் குற்​றச்​சாட்​டு​கள் முன்​வைக்​கப்​பட்​டன.இது குறித்து காங்​கிரஸ் தலை​வர் கார்கே தனது சமூக வலை​தளத்தில் கூறி​யுள்​ள​தாவது: கல்​வித்​ துறை​யில் மத்​திய அரசின் தோல்வி​களால் சிபிஎஸ்இ மாணவர்​களும், நீட் தேர்​வர்​களும் பலி யா​டாகி உள்​ளனர். மாணவர்​களை பாகிஸ்​தானியர்​கள் என்​றும் தேச விரோ​தி​கள் என்​றும் பச்சை குத்​து​வது நியாய​மா ? 17 வயதுடைய சிபிஎஸ்இ தேர்​வர்​களா​யினும் சரி, அல்​லது நீட் தேர்வுக்​குத் தயா​ராகும் மாணவர்​களா​னாலும் சரி. நாட்​டின் கல்வி அமைப்​பையே சீர்​குலைக்​கச் சதி செய்​து, தேசத்​தின் இளைஞர்களைத் தனது ஊழல் வலை​யில் பிரதமர் மோடி தலைமையி​லான அரசு சிக்​க​ வைத்​துள்​ளது. திறமை​களை வளர்த்​தெடுப்​ப​தில் ஒரு காலத்​தில் முக்​கியப் பங்காற்​றிய கல்வி நிறு​வனங்​கள் அனைத்​தும், தற்​போது பாஜக தலை​மையி​லான அரசின் கீழ் வீழ்ச்​சி​யடைந்து வரு​கின்​றன. ஐஐடி-க்​கள், ஐஐஎம்​-கள், மத்​தி​யப் பல்​கலைக்​கழகங்​கள், தேசிய அளவி​லான கல்வி நிறு​வனங்​கள் ஆகியவை நாட்​டின் திறமையாளர்​களை உரு​வாக்​கிய ஒரு காலம் இருந்​தது. ஆனால் இப்​போது, பாஜக​வின் கொள்​ளை​யடிக்​கும் போக்​கின் காரண​மாக, நம்​மால் ஒரு தேர்வு வாரி​யத் தேர்​வைக்​கூட முறையாக நடத்த இயலாத நிலை ஏற்​பட்​டுள்​ளது. அத்​தகைய அவல நிலைக்​குத்​தான் அவர்​கள் நம்​மைத் தள்​ளி​யுள்​ளனர்​. இவ்வாறு கார்​கே தெரிவித்​துள்​ளார்​.