Home செய்திகள் தேசிய செய்திகள் சம்பல் கொள்ளைக்காரனை பாஜக எம்எல்ஏ புகழ்ந்ததால் சர்ச்சை

சம்பல் கொள்ளைக்காரனை பாஜக எம்எல்ஏ புகழ்ந்ததால் சர்ச்சை

போபால், ஜூன் 2- சம்​பல் பள்​ளத்​தாக்​கின் கொள்​ளைக்​கார​னாக வலம் வந்து என்​க​வுன்ட்​டர் செய்​யப்​பட்ட ராம்​ பாபு கதா​ரியா தனது இன்ப, துன்​பங்​களில் பங்​கெடுத்த சிறந்த நண்​பர் என்று பாஜக எம்​எல்ஏ புகழ்ந்து பேசி​யது சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அகில்​யா​ பாய் ஹோல்​கரின் பிறந்​த ​நாளைக் கொண்​டாடு​வதற்​காக பிச்​சோர் பகு​தி​யில் பால்​-​ பாகேல் சமூகத்​தைச் சேர்ந்த ஆயிரக்​கணக்​கான மக்​கள் திரண்​டிருந்​தனர். மேடை​யில் அச்​சமூகத்​தின் தலை​வர்​கள், மக்​கள் பிர​தி​நி​தி​கள் மற்​றும் கலைக் குழு​வினர் பங்​கேற்​றனர். ஆனால், அங்கு வந்​திருந்த அனை​வரின் கவனத்​தை​யும் ஈர்த்​தது அகில்​யா ​பாய் ஹோல்​கரின் உரு​வப்​ படத்​திற்கு அரு​கில் வைக்கப்​பட்​டிருந்த மற்​றொரு புகைப்​படம் தான். அது, சம்​பல் பள்ளத்​தாக்​கின் மிகக் கொடூர​மான கொள்​ளைக்​காரர்​களில் ஒருவ​ரான ராம் ​பாபு கதா​ரி​யா​வின் புகைப்​ பட​மாகும். அகில்​யா ​பாய் ஹோல்​கரின் படத்​திற்கு மட்​டுமின்​றி, ராம்​பாபு கதா​ரி​யா​வின் படத்​திற்​கும் மாலைகள் அணி​வித்து பாஜக எம்எல்ஏ பிரீத்​தம் லோதி பேசி​ய​தாவது: ராம் ​பாபு கதாரியாவுக்கும் எனக்​கும் தனிப்​பட்ட உறவு இருந்​தது. நாங்​கள் இரு​வரும் இன்ப, துன்​பங்​களில் ஒன்​றாகப் பங்​கெடுத்த தோழர்கள். பெண் ஒரு​வருக்கு இழைக்​கப்​பட்ட அநீ​திக்கு எதி​ராக ஆயிரக் ​கணக்​கான மக்​களைத் திரட்டி போராட்​டம் நடத்தினோம். ஒரு ரவுடி, கொள்​ளைக்​காரனுக்கு உதவு​கிறான் என்​று​ தான் அப்போது மக்​கள் பார்த்​தார்​கள். ஆனால், கொள்​ளைக்​காரர்​கள் மனிதர்​கள் இல்​லை​யா? ராம் ​பாபு கதா​ரியா சூழ்​நிலை காரணமாகவே குற்ற உலகிற்​குத் தள்​ளப்​பட்​டார். அவருடைய சூழ்நிலையை நான் மிக நெருக்​க​மாக அறிவேன். சமு​தா​யத்​தில் உள்ள சில மனிதர்​கள் அவரை அந்த அளவிற்​குத் துன்புறுத்தினார்கள். அதன் காரண​மாகவே அவர் கொள்​ளைக்​கார​னாக மாற வேண்டிய கட்​டா​யம் ஏற்​பட்​டது. இல்​லை​யெனில், ராம்​ பாபு ஒருபோதும் கொள்​ளைக்​கார​னாக வேண்​டிய விதி கிடை​யாது. அவரைப் பற்​றிய அனைத்​தும் எனக்கு நினை​விருக்​கிறது. சிறைச்சாலை முதல் அடர்ந்த காடு​கள் வரை நாங்​கள் எல்லா இடங்​களி​லும் சந்​தித்​திருக்​கிறோம்​. இவ்​வாறு லோதி பேசி​னார்​.