Home விளையாட்டு ஷுப்​மன் கில் வேதனை

ஷுப்​மன் கில் வேதனை

அகம​தா​பாத், ஜூன் 2- ஐபிஎல் இறு​திப் போட்​டி​யில் ஆர்சிபி அணி​யிடம் 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்து 2-வது முறையாக பட்​டம் வெல்​லும் வாய்ப்பை ஷுப்​மன் கில் தலைமையி​லான குஜராத் டைட்டன்ஸ் அணி இழந்​தது. முதலில் பேட் செய்த குஜராத் அணியை ஷார்ட் பால் வியூ​கத்தை பயன்​படுத்தி ஆர்சிபி அணி 155 ரன்​களுக்​குள் கட்​டுப்​படுத்​தி​யது. 156 ரன்​கள் இலக்கை துரத்​திய ஆர்​சிபி அணி பவர்​பிளே​வில் 70 ரன்​களை குவித்து வெற்​றிக்​கான பாதையை எளிதாக்​கியது. கடைசி வரை களத்​தில் நின்று 42 பந்​துகளில், 75 ரன்​கள் விளாசி அணி​யின் வெற்​றிக்கு விராட் கோலி முக்​கிய பங்​காற்​றி​னார். இறு​திப் போட்​டிக்கு பின்​னர் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யின் கேப்டன் ஷுப்​மன் கில் கூறிய​தாவது: நாங்​கள் 180 முதல் 190 ரன்கள் எடுத்​திருந்​தால், அது ஒரு நல்ல போட்​டி​யாக இருந்திருக்கும். ஆடு​களம் ஆங்​காங்கே சற்று மாறு​பட்ட வேகத்தில் இருந்​தது. பந்து சில நேரம் மெது​வாக​வும், சில நேரம் வேக​மாக​வும் வந்​தன. வேகப்​பந்து வீச்​சாளர்​களுக்கு ஆரம்​பத்​தில் பந்து சற்று ஸ்விங் ஆனது. நாங்​கள் ஆரம்​பத்​திலேயே விக்கெட்டுகளை இழந்​து​விட்​ட​தால், எங்​களால் இறு​திவரை உத்வேகத்தை பெற முடி​யாமல் போனது.