Home செய்திகள் உலக செய்திகள் குவைத் விமான நிலையம் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்தியர் உயிரிழப்பு

குவைத் விமான நிலையம் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்தியர் உயிரிழப்பு

குவைத் சிட்டி: ஜூன் 4-
அமெரிக்கா – ஈரான் இடையே​யான சண்டை நிறுத்​தத்​துக்​குப்​பின் நேற்று இரு நாடு​கள் இடையே மிகப் பெரியள​வில் மோதல் வெடித்​தது. இதில் குவைத் விமான நிலையம் தாக்​கப்​பட்​ட​தால், அங்கு இந்தியர் ஒருவர் உயிரிழந்தார்.
அணு ஆயுத தடை ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட ஈரான் மறுத்ததால் அந்​நாட்​டின் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் படைகள் கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி தாக்​குதல் நடத்​தின. இதில் ஈரானின் ராணுவத் தளங்​கள் பல சேதம் அடைந்​தன. இந்​நிலை​யில் இரு நாடு​கள் இடையே கடந்த ஏப்​ரல் மாதம் போர் நிறுத்​தம் ஏற்​பட்​டது.
செறிவூட்​டப்​பட்ட யுரேனி​யத்தை ஒப்​படைக்க ஈரான் முன்​வ​ராத​தால், போர் நிறுத்​தம் ஏற்​ப​டா​மல் இருந்​தது. இந்​நிலை​யில் அமெரிக்க ட்ரோன் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்​தி​யது. இதற்கு பதிலடி​யாக ஈரானின் 2 தீவு​களில் உள்ள வான் பாது​காப்பு ரேடார் மற்​றும் தொலை தொடர்பு கோபுரத்தை அமெரிக்​கப்​படை சில நாட்​களுக்கு முன் தகர்த்​தது. இதனால் இரு நாடு​கள் இடையே மீண்​டும் போர் ஏற்​படும் சூழல் நில​வியது.
இச்​சூழலில் ஈரானின் எண்​ணெய் கப்​பல் ஒன்று ஈரான் நோக்கி சென்​றது. அந்த கப்​பல் மீது அமெரிக்​கப்​படை ஏவு​கணை தாக்​குதல் நடத்தி முடக்​கியது. அமெரிக்க படைகள் குவைத் மற்​றும் பஹ்ரைனில் இருந்து ஈரான் மீது தாக்​குதல் நடத்​து​வ​தால் அந்​நாடு​கள் மீது ஈரான் நேற்று ஏவு​கணை மற்​றும் ட்ரோன்​களை ஏவி பதிலடி கொடுத்​தது. குவைத் சர்​வ​தேச விமான நிலை​யத்​தின் முதல் முனை​யத்​தில் நடை​பெற்ற ட்ரோன் தாக்​குதலில் இந்தியர் ஒருவர் உயி​ரிழந்​தார். 63 பேர் காயமடைந்தனர்.இதையடுத்து குவைத் தனது வான் வெளியை மூடியது. குவைத் நோக்கி வந்த விமானங்​கள் வேறு இடங்​களுக்கு திருப்பி விடப்பட்டன. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் தேவையான உதவி அளிக்கப்படும் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இச்சம்பவத்தால் இண்டிகோ நிறு​வனம் குவைத் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்​தி​யுள்​ளது. பயணி​கள் தங்​கள் முழு கட்​ட​ணத் தொகையை திரும்ப பெறலாம். அல்​லது குவைத்​துக்கு மீண்​டும் விமான போக்​கு​வரத்து தொடங்​கிய​வுடன் பயணம் செல்ல அனுமதி வழங்​கி​யுள்​ளது.பஹ்ரைன் மீது தாக்​குதல்:பஹ்ரைன் மீது ஈரான் 3 ஏவு​கணை​கள் மற்​றும் ஏராள​மான ட்ரோன்​களை ஏவி தாக்​குதல் நடத்​தி​யது. இவை அனைத்​தும் நடுவானில் அழிக்​கப்​பட்​டன. அமெரிக்க படைகளை தங்​கள் நாட்டில் இருந்து செயல்பட குவைத் மற்​றும் பஹ்ரைன் அரசு அனுமதி அளித்​துள்​ள​தால்​, அந்​நாட்​டின்​ மீது தாக்​குதல்​ நடத்தப்பட்​ட​தாக ஈரான்​ கூறி​யுள்​ளது.