Home மாவட்டங்கள் பெங்களூர் காலி மதுபாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டம்

காலி மதுபாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டம்

சென்னை: ஜூன் 6-
காலி மதுபாட்டில்களை திரும்​பப் பெறும் திட்டத்தை முழு​மை​யாக மாற்​றியமைப்​பது குறித்து 8 வாரங்​களில் அறிக்கை தாக்​கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.
சுற்​றுச்​சூழல் மற்​றும் வன உயி​ரினங்​களை கருத்​தில் கொண்டு டாஸ்​மாக் கடைகளில் விற்​கப்​படும் மது​பான பாட்​டில்​களை ரூ. 10-க்கு கூடு​தலாக விற்​பனை செய்து அந்த பாட்​டிலை திருப்​பித்​தரும் பட்​சத்​தில் ரூ.10-ஐ திருப்பி வழங்​கும் வகை​யில் திட்​டத்தை செயல்​படுத்த தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் உத்​தர​விட்​டிருந்​தனர்.
இந்​நிலை​யில், இந்த வழக்கு நீதிப​தி​கள் என்​.சதீஷ்கு​மார், டி.பரத சக்​ர​வர்த்தி ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் காணொலி காட்சி வாயி​லாக விசா​ரணைக்கு வந்​தது.அப்​போது அரசு தலைமை வழக்​கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, தமிழகத்​தில் 3 மாவட்​டங்​கள் தவிர்த்து எஞ்​சிய அனைத்து மாவட்​டங்​களி​லும் காலி மது​பாட்​டில்​களை திரும்​பப்​பெறும் திட்​டம் அமலில் உள்​ள​தாக தெரி​வித்​தார்.
அப்​போது நீதிப​தி​கள், “இந்த திட்​டத்தை முழு​மை​யாக மாற்​றியமைக்க இருக்​கிறோம். அப்​போது காலி மது​பாட்​டில்​களை திரும்​பப்​பெற டாஸ்​மாக் பணி​யாளர்​களை ஈடு​படுத்​தாமல் இருப்​ப​தற்​கான சாத்​தி​யக்​கூறுகள் குறித்து ஆராயப்​படும்.
இதற்​காக ரூ. 10 கூடு​தலாக வசூலித்​தால் அதை​யும் ரசீ​தில் குறிப்​பிட வேண்​டும்​.அதை​விடுத்து அந்த ரூ.10-ஐ கூடு​தலாக வசூலிப்​ப​தற்​கான உரிம​மாக எடுத்​துக்​கொள்​ளக் கூடாது” என்​றனர்.
அப்​போது குறுக்​கிட்ட தலைமை வழக்​கறிஞர் விஜய் நாராயண், “இந்த அரசு ஊழலை ஒரு​போதும் சகித்​துக்​கொள்​ளாது” என்​றார். அதையடுத்து நீதிப​தி​கள், தமிழகம் முழு​வதும் காலி மது​பாட்​டில்​களை திரும்​பப்​பெறும் திட்​டத்தை முழு​மை​யாக மாற்​றியமைப்​பது தொடர்​பாக தமிழக அரசு 8 வார காலத்​தில் பதிலளிக்க வேண்​டும்.இதற்​காக எடுக்​கப்​பட்​டுள்ள நடவடிக்​கை​களின் முன்​னேற்​றம் குறித்து 4 வாரங்​களில் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும் என உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை ஜூலை 10-ம்​ தேதிக்​கு தள்ளி வைத்துள்ளனர்.