Home மாவட்டங்கள் பெங்களூர் ரூ.7.64 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்: 3 பேர் அதிரடி கைது

ரூ.7.64 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்: 3 பேர் அதிரடி கைது

மங்களூரு: ஜூன 6-
காரில் பயங்கரமான முறையில் கடத்தி வரப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக மூன்று பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்பண்ட்வாள் நகர எல்லைக்குட்பட்ட மெல்கார் மேம்பாலம் அருகே, கார் ஒன்றில் பெருமளவில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த காரை மடக்கிச் சோதனையிட்டனர்.அதில், சட்டவிரோதமாகப் போதைப்பொருள் கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காரில் இருந்த ஜுபைர், முகமது சவாத் மற்றும் ரஷீத் ஆகிய 3 போதைப்பொருள் கடத்தல் ஆசாமிகளையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூபாய் 7.64 லட்சம் மதிப்புள்ள ‘எம்.டி.எம்.ஏ’ போதைப்பொருள், கடத்தலுக்குப் பயன்படுத்திய சொகுசு கார் மற்றும் 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம், இந்த விபரீத போதைப்பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? இதன் பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் யார்?
யாருக்கு விநியோகம் செய்யக் கொண்டு செல்லப்பட்டது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.