
பெங்களூரு: ஜூன் 6-
கிரேட்டர் பெங்களூரு வாரிய (ஜிபிஏ) எல்லைக்குட்பட்ட ஐந்து மாநகராட்சிப் பகுதிகளில், அறிவியல்பூர்வமற்ற முறையில் குப்பைகள் கொட்டப்படுவதும், ஆங்காங்கே குப்பைக் கிடங்குகள் (க்ஷஅதிகரித்து வருவதும் கர்நாடக லோக் ஆயுக்தா அமைப்பிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக லோக் ஆயுக்தா அதிகாரிகள் தானாக முன்வந்து (வழக்குப்பதிவு செய்து, விசாரணையை அதிரடியாக முடுக்கிவிட்டுள்ளனர்.
ஏற்கனவே பலமுறை குப்பை மேலாண்மை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அழைத்து லோக் ஆயுக்தா எச்சரித்திருந்தும், இந்தச் பிரச்சினைக்கு இன்னும் முழுமையான தீர்வு காணப்படவில்லை.
இதன் காரணமாக, தற்பொழுது காவல் கண்காணிப்பாளர் தலைமையில், பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளை உள்ளடக்கிய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தனிப்படையினர் ஐந்து மாநகராட்சிப் பகுதிகளிலும் அதிரடிச் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் லோக் ஆயுக்தா திடீர் பரிசோதனை நடத்தி குப்பை மேடுகளை பார்வையிட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது


















