Home செய்திகள் தேசிய செய்திகள் தங்கம் விற்கப்படவில்லை: ஆர்பிஐ விளக்கம்

தங்கம் விற்கப்படவில்லை: ஆர்பிஐ விளக்கம்

புதுடெல்லி ஜூன் 8-
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) சமீபத்திய வாராந்திர புள்ளிவிவரத்தின்படி, மே 29, 2026 உடன் முடிந்த வாரத்தில் அதன் தங்க கையிருப்பு மதிப்பு 2.19 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.
இதனால் ஆர்பிஐ தனது தங்க இருப்புகளில் ஒரு பகுதியை விற்றிருக்கலாம் என்ற தகவல் வெளியானது. ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ள ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, தங்க இருப்பு அப்படியே உள்ளது என்றும், உண்மையில் அது சிறிதளவு அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தங்க கையிருப்பின் சரிவானது பெரும்பாலும் மதிப்பு மாற்றங்களின் பிரதிபலிப்பேயன்றி, தங்கம் விற்கப்பட்டதால் அல்ல என்று ஆர்பிஐ தெளிவுபடுத்தியுள்ளது.