Home மாவட்டங்கள் பெங்களூர் தமிழகத்தில் மின்வெட்டு விஸ்வரூபம் இரவில் மக்கள் போராட்டம்

தமிழகத்தில் மின்வெட்டு விஸ்வரூபம் இரவில் மக்கள் போராட்டம்

சென்னை: ஜூன் 8-
விஸ்வரூபம் எடுத்துள்ள மின்வெட்டு பிரச்சினையால், பொது​மக்​கள் கடும் சிரமத்​துக்கு உள்​ளாகின்​றனர். இரவு நேரங்​களில் தூக்​கத்தை தொலைத்து வீதி​களில் இறங்கி மக்​கள் போராடி வரு​கின்​றனர்.
தமிழகத்​தில் கடந்த மே மாத இறு​தி​யில் அக்னி நட்​சத்​திரம் காரண​மாக வெயி​லின் தாக்​கம் கடுமை​யாக இருந்​தது. பகல் நேரங்​களில் மக்​கள் வீட்டை விட்டு வெளியே வர முடி​யாத அளவுக்கு வெயி​லின் தாக்​கம் அதி​க​மாக இருந்​தது.
மேலும், இரவு நேரங்​களி​லும் வெப்​பத்​தின் தாக்​கம் காணப்​பட்​டது. இதனிடையே, சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இரவு நேரங்​களில் நீண்ட நேரம் மின்​சா​ரம் தடைபட்​டது.
இதனால் பொது​மக்​கள் கடும் அவதிக்​குள்​ளாகினர். பொது​மக்​கள் சாலைகளில் இறங்கி போராட்​டங்​களை நடத்​தினர். இதையடுத்​து, சில நாட்​கள் மின்வெட்டு பிரச்​சினை ஏற்​ப​டா​மல் இருந்​தது.
ஆனால், கடந்த சில நாட்​களாக மீண்​டும் இரவு நேரங்​களில் மின்​வெட்டு பிரச்​சினை விஸ்​வரூபம் எடுத்​துள்​ளது. நள்​ளிரவு நேரங்​களில் ஏற்​படும் மின்​வெட்டு காரண​மாக குழந்​தைகள், முதி​ய​வர்​கள் மற்​றும் நோயாளி​கள் தூக்​கமின்றி தவித்து வரு​கின்​றனர்.
மின்​தடை குறித்​துப் பொது​மக்​கள் மின்​வாரிய அலு​வல​கங்​களைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்​றால், முறை​யான பதில்​கள் அதி​காரி​களிடம் இருந்து கிடைப்​ப​தில்லை என்​றும், தொலைபேசி இணைப்​பு​கள் துண்​டிக்​கப்​படு​வ​தாக​வும் மக்​கள் குற்​றம்​சாட்​டு​கின்​றனர்.
மக்​கள் போராட்​டம்
சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் மின்​வெட்டு பிரச்​சினை தீவிர​மாக உள்​ளது. ஒருசில இடங்​களில் பல மணி நேரம் மின்​வெட்டு ஏற்​படு​கிறது. குறிப்​பாக, முதல்​வர் விஜய்​யின் பெரம்​பூர் தொகு​தி​யில் உள்ள வியாசர்​பாடி பகு​தி​யில் நேற்​று​முன்​தினம் மக்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.
குறிப்​பாக, முதல்​வர் விஜய் வசிக்​கும் நீலாங்​கரை பகு​தி​யிலும் நேற்​று​முன்​தினம் மின்​வெட்டு ஏற்​பட்​டது. இதனால், பொது​மக்​கள் கூடு​வாஞ்​சேரி மின்​வாரிய அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்டு போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். முட்​டுக்​காடு பகு​தி​யில் திருப்​போரூர் எம்​எல்ஏ விஜய​ராஜிடம் பெண்​கள் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர். அவர்​களை எம்​எல்ஏ சமா​தானம் செய்ய முயன்​றார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணியிலும் மின்வெட்டு கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்​து, மின்​வாரிய அதி​காரி​கள் கூறிய​தாவது: பெரம்​பூர் தொகு​தி​யில் தாழ்​வழுத்த மின் கம்​பி​யில் ஏற்​பட்ட பழுது காரண​மாக மின்​தடை ஏற்​பட்​டது.
உடனடி​யாக, மாற்று கம்​பிகளை பொறுத்தி அந்த பிரச்​சினைக்கு தீர்வு கண்​டோம். இரவு நேரங்​களில் மின்​தடை ஏற்பட வெப்​ப​மும், அதிக சுமை​யும் முக்​கிய காரணி​களாக உள்​ளன. மின்​விநி​யோக கட்​டமைப்​பில் இருக்​கும் கருவி​களில் அதிக வெப்​பம் ஏற்​படும் போது அவை பழுதடைகின்​றன.இரவு நேரங்​களில் மின்​வெட்டு ஏற்​படும் போது மக்​கள் கோபமடைவது நியா​யம் தான். இருந்​தா​லும் உடனடி​யாக அந்த பகு​தி​யின் உதவி பொறி​யாளாருக்கு தொடர்ந்து அழைத்து அவர்​களிடம் கேட்​பது, சீரமைப்பு பணி​களை பாதிக்​கிறது. மக்​கள் மின்​னகம் சேவை மையத்தை 94987 94987 என்ற எண்​ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்​தாலே போது​மானது. மக்​கள் அளிக்​கும் புகார் எங்​கள் பொறி​யாளர்​களுக்கு தெரிந்​து​விடும், பிரச்​சினை சரி செய்​யப்​பட்​டதை மக்​களும் உறுதி செய்து கொள்ள முடி​யும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.