
பெங்களூரு: ஜூன் 8-
ஹொசகோட்டே அருகே உள்ள அத்திவாட்டா கேட் பகுதியில், கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தும், கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், நல்ல வேளையாக பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மோதிய வேகத்தில் அரசு பேருந்தின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி உருக்குலைந்தது. விபத்து நடந்த சமயத்தில் பேருந்தில் இருந்த பயணிகளுக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது. அனைவரும் பெரும் உயிர்ச்சேதமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர்.


















