Home செய்திகள் தேசிய செய்திகள் சைபர் ஆபத்துகளில் இருந்து நிறுவனங்களைப் பாதுகாக்க திட்டம்

சைபர் ஆபத்துகளில் இருந்து நிறுவனங்களைப் பாதுகாக்க திட்டம்

மும்பை, ஜூன்.10-
இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து வரும் அதே வேளையில், சைபர் குற்றங்களும், ஆன்லைன் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ரான்சம்வேர் தாக்குதல்கள், ரகசியத் தரவுகள் திருட்டு மற்றும் நிறுவனங்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் சைபர் ஆபத்துகள் தொழில்துறையினருக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.
இதனைக் கருத்தில் கொண்டு, பிரபல காப்பீட்டு நிறுவனமான இந்திய நிறுவனங்களின் பாதுகாப்பிற்காக லிபர்ட்டி சைபர் ரெசல்யூஷன் என்ற புதிய மற்றும் விரிவான சைபர் இன்சூரன்ஸ் திட்டத்தை இன்று (ஜூன் 10) அறிமுகப்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் பல தசாப்த காலப் பாரம்பரியமும், நிதி பலமும் கொண்ட
‘லிபர்ட்டி மியூச்சுவல்’ குழுமத்தின் பின்னணியோடு இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் நிறுவனங்களுக்கு, 24 மணி நேரமும் (24/7) உடனடியாக வழிகாட்டும் ‘இன்சிடென்ட் ரெஸ்பான்ஸ் அவசர உதவி மற்றும் பிரத்யேக சைபர் நிபுணர்களின் தொழில்நுட்ப ஆதரவு இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.
இந்த புதிய திட்டத்தின் அறிமுகம் குறித்து லிபர்ட்டி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி மற்றும் முழுநேர இயக்குநர் திரு. பராக் வேத் கூறுகையில்:
டிஜிட்டல் மயமாகி வரும் இன்றைய சூழலில், சைபர் பாதுகாப்பை பலப்படுத்துவது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மிக முக்கியமான கடமையாகும். எங்களது சர்வதேச சைபர் நிபுணத்துவம் மற்றும் ஆழ்ந்த அனுபவத்தைக் கொண்டு இந்த ‘லிபர்ட்டி சைபர் ரெசல்யூஷன்’ திட்டத்தை
இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளோம். இது மாறிவரும் சைபர் அச்சுறுத்தல்களை நிறுவனங்கள் தைரியமாக எதிர்கொள்ள உதவும்” என்று நம்பிக்கையோடு தெரிவித்தார்.
இதேபோல், நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு மற்றும் மறுகாப்பீட்டுத் தலைவர் செல்வி கீஷா ஜார்ஜ் இதுகுறித்து விளக்கி பேசினார்.