
சென்னை: ஜூன் 12-
அரக்கோணம் யார்டில் மறுசீரமைப்பு பணி நடக்கவுள்ளதால், 57 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரக்கோணம் யார்டில் மறுசீரமைப்பு பணி நடக்கவுள்ளதால், 57 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி அரக்கோணம் – திருத்தணிக்கு ஜூன் 13 முதல் 26-ம் தேதி வரை அதிகாலை 4, 5 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருத்தணி – அரக்கோணத்துக்கு இரவு 9.15, 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருத்தணி – சென்னை சென்ட்ரலுக்கு காலை 6.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய 5 ரயில்கள் ரத்து செய்யப்படும்.
சென்னை சென்ட்ரல் – திருச்சானூருக்கு ஜூன் 20 முதல் 25-ம் தேதி வரை காலை 9.50 மணிக்கு இயக்கப்படும் மெமு ரயில், திருச்சானூர் – சென்னை சென்ட்ரலுக்கு மேற்படி நாட்களில் மதியம் 1.30 மணிக்கு இயக்கப்படும் மெமு ரயில், அரக்கோணம் – வேலூருக்கு மேற்படி நாட்களில் பிற்பகல் 2.50 மணிக்கும், வேலூர் – அரக்கோணத்துக்கு காலை 10 மணிக்கு இயக்கப்படும் மெமு ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரை – அரக்கோணத்துக்கு ஜூன் 13 முதல் 26-ம் தேதி வரை அதிகாலை 4.05, மதியம் 2.25, மாலை 6.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருவாலங்காடு – அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.


















