Home செய்திகள் தேசிய செய்திகள் காணிக்கை திருட்டு: சிபிஐ விசாரணை?

காணிக்கை திருட்டு: சிபிஐ விசாரணை?

புதுடெல்லி: ஜூன் 16-
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு குறித்து நீதி​மன்ற கண்​காணிப்​புடன் கூடிய சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும் எனறு உச்ச நீதி​மன்​ற தலைமை நீதிபதிக்கு கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்​பட்​டுள்​ளது.
உத்​தர பிரதேச மாநிலம் அயோத்​தி​யின் ஸ்ரீராம ஜென்​ம பூமி கோயி​லில் காணிக்கை பணம் திருடப்​பட்ட விவ​காரம் இப்​போது உச்ச நீதி​மன்​றத்தை எட்​டி​யுள்​ளது. இது குறித்து தலைமை நீதிபதி சூர்​ய​காந்​துக்கு அனுப் பிர​காஷ் அவஸ்தி என்ற வழக்​கறிஞர் நேற்று இ-மெயில் மூலம் 4 பக்க கோரிக்கை மனுவை அனுப்பி வைத்துள்ளார். புகார் குறித்து எப்​ஐஆர் பதிவு செய்​ய​வும் உச்ச நீதி​மன்ற மேற்​பார்​வை​யில் சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட​வும் கோரி​யுள்​ளார்.
மேலும், “இது கோடிக்​கணக்​கான பக்​தர்​களின் நம்​பிக்​கை​யுடன் தொடர்​புடைய விவ​காரம். கோயி​லின் காணிக்கை கையாடல், தவறாகப் பயன்​படுத்​தப்​பட்​டது அல்​லது காணா​மல் போனது போன்ற சமீபத்​திய செய்​தி​கள், உள்​நாட்​டிலும் வெளி​நாட்​டிலும் உள்ள பக்​தர்​களிடையே கவலையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. உ.பி. அரசால் அமைக்​கப்​பட்ட சிறப்பு புல​னாய்​வுக் குழு போதுமானதாக இல்​லை. இந்த விவ​காரத்​தில் இன்​னும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்​யப்​பட​வில்​லை.விலை ம​திப்​பற்ற சேவை​யாற்​றும் ராமர் கோயில் அறக்​கட்​டளை மீது களங்​கம் கற்​பிக்​கும் நோக்​கம் எனக்கு இல்​லை. இருப்​பினும், புகாரின் தீவிரத்​ தன்மை கருதி விசா​ரணை​யில் அதிக வெளிப்படைத் ​தன்​மை​யும் நம்​பகத்​தன்​மை​யும் தேவைப்படுகிறது. எனவே, உச்ச நீதி​மன்​றத்​தின் மேற்பார்வையில் சிபிஐ விசாரணைக்கு உத்​தர​விட வேண்​டும்” என்று கூறி​யுள்​ளார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து தலைமை நீதிபதி விரைவில் முடிவெடுப்பார்.
ஸ்ரீராம ஜென்​ம பூமி கோயி​லில் இருந்து சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான காணிக்கை திருடப்​பட்​ட​தாக தகவல்​கள் வெளியாகி உள்​ளன. கோயி​லின் காணிக்கை தொகையை 50 ஊழியர்​கள் ஒரு குளிரூட்​டப்​பட்ட அறை​யில் அன்​றாடம் எண்ணுகின்​றனர். இவர்​களில் 24 ஊழியர்​கள் பணத்​தாள்​களை எண்ணி கட்​டு​களாக கட்​டும் பணி​யைச் செய்​கின்​றனர். இந்த ஊழியர்​களை, கோயில் அறக்​கட்​டளை ஒரு தனி​யார் நிறு​வனம் மூல​மாகப் பணி​யமர்த்​தி​யுள்​ளது.