Home செய்திகள் உலக செய்திகள் வெற்றி, தோல்வி மற்றும் பல… ஈரான் போரில் ட்ரம்ப்புக்கு கிட்டியது என்ன?

வெற்றி, தோல்வி மற்றும் பல… ஈரான் போரில் ட்ரம்ப்புக்கு கிட்டியது என்ன?

வாஷிங்டன்: ஜூன் 17-
ஈரானும் அமெரிக்காவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. எல்லாம் சரியாகச் சென்றால் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) ஈரானும் அமெரிக்காவும் போரை நிறுத்திக் கொள்ளும் அந்த ஒப்பந்தம் ஸ்விட்சர்லாந்தில் கையெழுத்தாகிவிடும். அதை அமைதி ஒப்பந்தம் என்பதைவிட புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றே சம்பந்தப்பட்ட நாடுகள் அழைக்கின்றன. காரணம் அமைதி ஒப்பந்தம் சட்டப்பூர்வமான பிணைப்பு கொண்டது.
ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்தம் அப்படியானது அல்ல.ஒப்பந்தம் எந்த வகையிலானதாக இருந்தாலும் சரி. அது நிறைவேறட்டும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்து நோக்கிக் கொண்டிருக்கின்றன. காரணம், மாடர்ன் உலகம் சமீப காலங்களில் கண்ட போர்களைப் போல் அல்லாது இந்தப் போர் எரிசக்தி விநியோகத்தில் உலகின் கிழக்கு – மேற்கு; வடக்கு – தெற்கு என பாரபட்சமின்றி பாதிப்புகளை ஏற்படுத்தியதே!
மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள அந்த ஒப்பந்தத்தில் என்னவிருக்கிறது என்று இதுவரை பொதுவெளியில் தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தான பின்னர்தான் போர் நிறுத்தம் அமலுக்கு வருமென்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்து ஒரு சந்தேகப் புள்ளியை வைத்திருக்கிறது.ஒரு சின்ன ரீவைண்ட்4 மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கின. ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்துவதற்காகவே இந்தத் தாக்குதல் என்று விளக்கமும் அளிக்கப்பட்டது. முதல் தாக்குதலில் ஈரானின் பள்ளிக்கூடத்தில் 170+ குழந்தைகள் உயிரிழந்தனர். ஈரான் – இஸ்ரேலின் தாக்குதலுக்கான காரணத்துக்கும், பள்ளிக்கூடம் தாக்கப்பட்டதற்குமான தொடர்பு என்னவாக இருந்துவிட முடியும் என்ற கேள்வி இன்றளவும் நீடிக்கிறது.ஈரானின் உச்சத் தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி, பிப்ரவரி 28, 2026 அன்று போர் தொடங்கிய முதல் 12 மணி நேரத்துக்குள் கொல்லப்பட்டார்.
இனி அடுத்து யார் உச்ச தலைவராக வந்தாலும் கொல்லப்படுவார் என்ற எச்சரிக்கையையும் விடுத்தது.தொடர்ந்து ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் செயலர் அலி லாரிஜானி, இஸ்லாமிய புரட்சிகர படையின் தளபதி எனப் பலரையும் தீர்த்துக் கட்டியது அமெரிக்கா. இஸ்ரேலும், அமெரிக்காவும் கூட்டாக தாக்குதல் நடத்த ஈரானும் பதிலடி கொடுக்கத் தொடங்கியது.
உலகத்துக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சர்வதேச எண்ணெய் வர்த்தகத்தில் 25% நடக்கும் முக்கிய மார்க்கமான ஹார்மூஸ் நீரிணையை மூடியது ஈரான். கச்சா எண்ணெய் விலை விர்ரென ஏறியது. இந்தியா உள்பட உலக நாடுகள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என்று முந்தைய உத்தரவில் சிறிய தளர்வையும் சகாயமாக நல்கியது அமெரிக்கா.பக்கவாட்டுச் சேதாரமாக, ஈரானுக்கு ஹிஸ்புல்லாக்கள் ஆதரவு கொடுக்க இன்றளவும் லெபனானை சிதைத்துக் கொண்டிருக்கிறது இஸ்ரேல்.