Home செய்திகள் உலக செய்திகள் அமெரிக்கா – ஈரான் இடையே 14 அம்ச ஒப்பந்தம் கையெழுத்து: போர் பதட்டம் தணிந்தது

அமெரிக்கா – ஈரான் இடையே 14 அம்ச ஒப்பந்தம் கையெழுத்து: போர் பதட்டம் தணிந்தது

வாஷிங்டன், ஜூன் 19-
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் இடையே 14 அம்சங்கள் அடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
உலக வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ‘ஹார்முஸ்’ ஜலசந்தியை மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறப்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக நடந்து வந்த ராணுவக் காரியாச்சரணைகள் மற்றும் மோதல்கள் முற்றிலும் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளைத் திரும்பப் பெறுவது மற்றும் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி 60 நாட்களுக்குள் தீர்வு காண்பது குறித்தும் இதில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்றைய தினம் சந்தித்த பிறகு இந்த ஒப்பந்த வரைவு இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தால் சர்வதேச அளவில் போர் பதற்றம் தணிந்து, அமைதி திரும்பும் சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்கா ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட பலமுறை முயற்சி செய்யப்பட்டோம் அது தோல்வி அடைந்தது இதனால் அவ்வப்போது போர் முழுவதும் பிறகு ஒத்திவைப்பதாக இருந்தது இதனால் உலக நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது இந்த நிலையில் அமைதி வெப்பம் இறுதியாகிய கையெழுத்து ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது