Home மாவட்டங்கள் பெங்களூர் மதுரை மேலூர் அருகே விபத்தில் குழந்தை உள்பட ஐந்து பேர் பலி

மதுரை மேலூர் அருகே விபத்தில் குழந்தை உள்பட ஐந்து பேர் பலி

மதுரை: ஆக. 3-
மதுரை மேலூர் அருகே விபத்தில் குழந்தை உள்பட ஐந்து பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் இன்று (ஆகஸ்ட் 03) காலை 6.30 மணிக்கு மேலூர் அருகே தும்பைப் பட்டியில் விபத்தில் சிக்கியது. பாலத்தின் மீது சென்றபோது டூவீலர் குறுக்கே வந்ததால் கார் நிலை தடுமாறி சென்டர் மீடியனை கடந்து எதிர்திசையில் திருச்சியை நோக்கி சென்ற கார் மீது கவிழ்ந்தது.
இந்த விபத்தில் குழந்தை உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்ற காரில் பயணம் செய்த சென்னை வாடிபாக்கத்தைச் சேர்ந்த ஶ்ரீராம் உட்பட 2 ஆண்கள், மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ராஜகுமாரி, ரஞ்சனா ஆகிய 2 பெண்கள், பிரணிகா (3) வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த காரில் பயணம் செய்த ஒரு ஆண் உட்பட 2 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.