
நியூயார்க்: ஆக. 3-
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகக் கடுமையான போர்ச் சூழல் நிலவி வருகிறது. இந்த மோதலில் அமெரிக்காவிற்கு மிகவும் நெருக்கமான சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகள் இப்போது பெரும் கோபத்திலும் அதிருப்தியிலும் ஆழ்ந்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த போரை எவ்வாறு கையாளப்போகிறார் என்பதிலும், அவரது ராணுவ திட்டங்களிலும் நிறைய தவறுகள் இருப்பதாக மத்திய கிழக்கு நாடுகள் கருதுகிறதாம்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையேயான போர் நீடித்தால், ஈரான் தங்களை இலக்கு வைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கும் என்று வளைகுடா நாடுகள் பயப்படுகின்றன. ஏற்கனவே பலமுறை இதுபோன்ற தாக்குதல்கள் நடந்துள்ளதால், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அமெரிக்காவிடம் இருந்து கூடுதல் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை (கேட்டுள்ளன. மேலும், ஒருவேளை போர் தீவிரமடைந்தால், அமெரிக்க ராணுவம் தங்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கும் என்ற தெளிவான உறுதியையும் அவை அமெரிக்காவிடம் கேட்டுள்ளன. கடைசி நேரத்தில் தாக்குதலை நிறுத்திய டிரம்ப் ஈரான் மீது புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அந்த முடிவை அவர் தற்காலிகமாக ஒத்திவைத்தார்.
சவுதி அரேபியாவின் கோரிக்கை: சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், டிரம்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வலியுறுத்தினார்.
அமைதிப் பேச்சுவார்த்தை: மத்திய கிழக்கில் அமைதியை விரும்பும் கத்தார் போன்ற நாடுகள், அமெரிக்கா – ஈரான் இடையே தூதரக பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். உலகில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெயில் சுமார் 20 சதவீதம் ‘ஹோர்முஸ் ஜலசந்தி’ என்ற குறுகிய கடல் வழியாகத் தான் கப்பல்களில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த வழியை ஈரான் அடைத்துள்ளதால், உலக நாடுகளுக்கு எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவானது.













