Home விளையாட்டு கட்​டிட வேலை​யி​ல் இருந்து கிளாஸ்கோவுக்​கு…- சாதனை படைத்த ரிஷிகண்டா சிங்

கட்​டிட வேலை​யி​ல் இருந்து கிளாஸ்கோவுக்​கு…- சாதனை படைத்த ரிஷிகண்டா சிங்

கிளாஸ்கோ: ஜூலை 27-
கிளாஸ்கோ காமன்வெல்த் விளை​யாட்​டுப் போட்டியில் வெள்​ளிப் பதக்​கம் வென்​றதன் மூலம் சாதனை படைத்​துள்ள ரிஷிகண்டா சிங், கட்​டிடம் கட்​டுமிடத்​தில் தினக்​கூலி​யாக இருந்து சாம்​பிய​னாக மாறிய​வர் என்ற செய்தி அனைவரை​யும் கவர்ந்​துள்​ளது.மணிப்பூர் மாநிலம் இம்​பாலைச் சேர்ந்த 28 வயதான ரிஷிகண்டா சிங், ஏழ்​மை​யான குடும்​பத்​தில் பிறந்​தவர். தனது இளம்​வயதை பெரும்​பாலும் வேலை பார்த்தே கழித்​துள்​ளார். இம்​பாலின் பல்வேறு பகு​தி​களில் கட்​டிட வேலைகளில் அவர் தினக்​கூலி​யாக வேலை பார்த்​துள்​ளார். செங்​கல், சிமெண்ட், பலகைகளை சுமந்து பிழைப்பை நடத்தி வந்த அவர் தனது விடா​முயற்​சி​யால் இன்று உலக விளை​யாட்டு ரசிகர்​களை திரும்​பிப் பார்த்து வந்​துள்​ளார்.தினந்​தோறும் செங்​கல், கட்​டு​மானப் பொருட்​களை தூக்கி தூக்கி தனது உடலை வலுப்​படுத்தி வந்​துள்​ளார். இதனால் இவரது கவனம் பளுதூக்​குதல் விளை​யாட்​டுக்கு சென்​றுள்​ளது. இதற்கு முன்பு 2017-ல் நடை​பெற்ற தேசிய பளுதூக்​குதல் போட்​டி​யில் அவர் சாம்​பியன் பட்​டம் வென்​றிருந்​தார். மேலும் இளை​யோர் காமன்​வெல்த் போட்​டி​யிலும் அவர் வெண்​கலத்​தைக் கைப்பற்றியிருந்​தார்.தனது வெற்றி குறித்து ரிஷிகண்டா சிங் கூறும்​போது, “முதலில் விளை​யாட்டு போட்​டிகளில் பங்​கேற்று சிறிய அளவி​லான வெற்​றிகளைப் பெற்​றேன். அதன் பின்​னர் போதிய பணம் கிடைக்​காத​தால் விளை​யாட்டை விட்டு விட்டு கட்​டிட வேலை​யில் சேர்ந்​தேன்.
தினக்​கூலி வேலை​யி​லிருந்து பளுதூக்​கும் விளை​யாட்​டில் சேர்ந்​த​ போது சாதனை படைக்க முடி​யும் என்று நம்​பினேன். தொடக்​கத்​தில் பெரும்​பாலும் தோல்வி​களே கிடைத்​தன. ஒரு சிறந்த பளுதூக்​கும் வீர​ராக வேண்​டும் என்ற என் கனவும், அந்த விளை​யாட்​டில் எனக்​கிருந்த எதிர்​கால​மும் முடிந்​து​விட்​ட​தாகவே தோன்​றியது. அப்​போது நான் இம்​பாலில் எனக்​குக் கிடைத்த வேலை​யைச் செய்தேன்.
அதன் பின்​னர் மீண்​டும் பளுதூக்​குதல் போட்​டிகளுக்​குத் திரும்​பினேன். விடாத முயற்​சி​யால் இப்​போது வெள்​ளிப் பதக்​கம் வென்​றுள்​ளேன்” என்​றார்.
மணிப்​பூர் மாநிலத்​திலிருந்து காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்​டி​யில் பதக்​கம் வென்ற முதல் வீரர் ரிஷிகண்டா சிங் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. இம்​பால் மேற்கு மாவட்​டத்​தி​லுள்ள நகைரங்​பாம் கிராமத்​தில் வளர்ந்த இவருக்கு விளை​யாட்​டு​தான் உலக​மாக உள்​ளது.