Home மாவட்டங்கள் பெங்களூர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி,தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி,தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: ஜூன் 19-
மக்களவை எதிர்க்கட்சித தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுலுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ பிரார்த்தனை செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில்; எனது அன்புச் சகோதரர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து ராகுல் குரல் கொடுத்து வருகிறார். அவர் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.