
தர்மபுரி: ஜூன் 20-
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த பிக்கல்நாயக்கன அள்ளிகிராமத்தை சேர்ந்த அங்கமுத்து (35) தவெக பிரமுகரான இவர் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். இன்று மதியம் மாரண்டஅள்ளி ஹோண்டா ஷோரூமில் புதியதாக இரு சக்கர வாகனம் எடுக்க 31 ஆயிரம் ரூபாய் முன் தொகையாக செலுத்தினார். எண்ணிக்கையின் போது 9500 ரூபாய் நோட்டுக்கள் போலீ கள்ள நோட்டுக்கள் என தெரிய வந்தது
உடனடியாக ஷோரூம் மேலாளர் ரஞ்சித் மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரூபாய் நோட்டுக்களை சோதனை செய்ததில் 19 ஐநூறு ரூபாய் நோட்டுக்களும் கள்ள நோட்டுக்கள் என தெரிய வந்தது,
அதனை தொடர்ந்து கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்த போலீசார் அங்கமுத்துவை கைது செய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர்.


















