Home செய்திகள் உலக செய்திகள் அமெரிக்காவுக்கு சீனா கொடுத்த அடி – லைன்ஷைன்’ கம்ப்யூட்டரை பார்த்து வியக்கும் உலகம்

அமெரிக்காவுக்கு சீனா கொடுத்த அடி – லைன்ஷைன்’ கம்ப்யூட்டரை பார்த்து வியக்கும் உலகம்

பெய்ஜிங், ஜூன் 26- அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் தரவரிசைப் பட்டியல் ஆண்டுக்கு இரண்டு முறை வெளியிடப்படுவது வழக்கம். சூப்பர் கம்ப்யூட்டிங் துறையில் உலகப் புகழ்பெற்ற பேராசிரியர்கள் மற்றும் கணினி வல்லுனர்கள் அடங்கிய “டாப்500” என்ற அமைப்பை சேர்ந்த குழு புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.. இதில் சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மையத்தில் நிறுவப்பட்டிருக்கும் ‘லைன்ஷைன்’ என்ற கம்ப்யூட்டர் முதலிடத்தை பெற்றிருக்கிறது. இது வினாடிக்கு 2 குவிண்டில்லியனுக்கும் அதிகமான வேகத்தில் கணக்கீடுகள் செய்துள்ளது. உலகில் உள்ள சூப்பர் கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்து தரவரிசைப்படுத்தும் சர்வதேச அமைப்பான TOP500, ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடைபெற்ற சர்வதேச சூப்பர் கம்யூட்டிங் மாநாட்டில் ( ISC 2026 ) மாநாட்டில் தனது 67-வது அதிகாரப்பூர்வப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அந்தப் பட்டியலில் சீனாவின் ‘LineShine’ முதலிடத்தில் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிபுயுவில் மட்டுமே இயங்குகிறது பொதுவாக இன்றைய சூப்பர் கம்ப்யூட்டர்கள் அதிவேகமாகச் செயல்பட என்விடியா போன்ற நிறுவனங்களின் பல ஆயிரம் ஜிபியு கிராபிக்ஸ் கார்டுகளைச் சார்ந்துதான் உருவாக்கப்படுகின்றன.ஆனால், லைன்ஷைன் முழுக்க முழுக்க சிபியு கொண்டு மட்டுமே இயங்குகிறது. அமெரிக்காவின் தொழில்நுட்பத் தடைகளை உடைப்பதற்காக, சீனா தனது சொந்த வடிவமைப்பான லிங்குன் கட்டமைப்பில், 1.37 கோடிக்கும் அதிகமான கோர்களைக் கொண்ட ஹுவாவே நிறுவனத்தின் LX2 பிராசஸர்களை இதில் பயன்படுத்தியுள்ளது.இதனை தொழில்நுட்ப வல்லுநர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தலைசுற்ற வைக்கும் வலையமைப்பு இந்த ஒரே ஒரு கம்ப்யூட்டருக்குள் மொத்தம் 1.37 கோடிக்கும் அதிகமான (13,789,440) சிபியு கோர்கள் உழைக்கின்றன. இது 90 பிரம்மாண்ட கணினி கேபினட்களில், 22,000-க்கும் மேற்பட்ட கணினி முனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 1.5 பெட்டாபைட் அளவிலான அதிவேக HBM மெமரியும், 11.6 பெட்டாபைட் அளவிலான பாரம்பரிய DDR5 ரேம் மெமரியும் உள்ளது.வினாடிக்கு 2.198 எக்ஸாஃப்ளாப்ஸ் இது வினாடிக்கு 2.198 எக்ஸாஃப்ளாப்ஸ் (Exaflops) வேகத்தில் கணக்கீடுகளைச் செய்யும் திறன் கொண்டது. அதாவது, வினாடிக்கு 2 குவிண்டில்லியன் (Quintillion – 2 பில்லியனுக்குப் பின் 9 பூஜ்ஜியங்கள்) கணக்குகளைத் துல்லியமாகச் செய்யும். உலகிலேயே 2 எக்ஸாஃப்ளாப்ஸ் வேகத் தடையைத் தாண்டிய முதல் சூப்பர் கம்ப்யூட்டர் இதுதான். அமெரிக்காவின் விண்டோஸ் அல்லது பிற ஆப்பரேட்டிங் சிஸ்டம்களைப் பயன்படுத்தாமல், சீனா தனக்கென உருவாக்கிய ‘கிலின் ஓஎஸ்’ (Kylin OS) என்ற இயங்குதளத்தில் இது செயல்படுகிறது. கணினிகளுக்கு இடையே தரவுகளை நொடிப் பொழுதில் பரிமாறிக் கொள்ள ‘லிங்கி’ என்ற அதிவேக உள்நாட்டு நெட்வொர்க் தொழில்நுட்பம் உள்ளது. இந்த ஒற்றை சூப்பர் கம்ப்யூட்டர் இயங்குவதற்கு மட்டும் சுமார் 42.2 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இது ஒரு சிறிய நகரத்திற்கே தேவையான மின்சார அளவுக்குச் சமமாகும்.