Home விளையாட்டு சுவிட்சர்லாந்து முதல் மொராக்கோ வரை: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறி அணிகள்

சுவிட்சர்லாந்து முதல் மொராக்கோ வரை: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறி அணிகள்

மியாமி, ஜூன் 26- உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் பி பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வென்றது. பி பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த நிலையில் சுவிட்சர்லாந்து, கனடா அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. வான்கூவரிலுள்ள பிசி பிளேஸ் மைதானத்தில் இந்த ஆட்டம் நேற்று அதிகாலை 12.30 மணிக்கு நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணியின் சார்பில் 46-வது நிமிடத்தில் ரூபன் வர்காஸும், 57-வது நிமிடத்தில் ஜோஹன் மன்சாம்பியும் தலா ஒரு கோலடித்தனர். கனடா அணிக்காக பிராமிஸ் டேவிட் 76-வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார். லீக் சுற்றின் முடிவில் பி பிரிவில் சுவிட்சர்லாந்து 7 புள்ளிகளுடன் முதலிடமும், கனடா 4 புள்ளிகளுடன் 2-ம் இடமும் பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின. போஸ்னியா அபாரம் சியாட்டிலில் உள்ள லூமன் ஃபீல்ட் மைதானத்தில் பி பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் போஸ்னியா & ஹெர்சகோவினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் கத்தார் அணியைத் தோற்கடித்தது. போஸ்னியா அணி சார்பில் கெரிம் அலாஜ்பேகோவிக் (29-வது நிமிடம்), எர்மின் மஹ்மிக் (80-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.இதில் கத்தார் அணி வீரர் மஹ்மூத் அபுனடா 34-வது நிமிடத்தில் சுய கோலடித்தார். கத்தார் அணி சார்பில் ஹசன் அல் ஹய்டோஸ் 42-வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார்.மொராக்கோ வெற்றி சி பிரிவில் அட்லாண்டாவின் மெர்சிடிஸ் பென்ஸ் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மொராக்கோ அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஹைதி அணியை வென்றது. மொராக்கோ அணி சார்பில் அச்ரப் ஹகிமி (39-வது நிமிடம்), இஸ்மாயில் சைபாரி (45+1-வது நிமிடம்), சவுபியான் ரஹிமி (78-வது நிமிடம்), கெஸ்ஸிமி யாசின் (99-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.

மொராக்கோ அணியின் யாசின் பவுனு ( 10-வது நிமிடம்) சுய கோலடித்ததார். வில்சன் இசிடோர் 43-வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார். லீக் சுற்றின் முடிவில் சி பிரிவிலிருந்து பிரேசில், மொராக்கோ அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. குரூப் ஏ பிரிவில் மான்டேரியிலுள்ள எஸ்டாடியோ பிபிவிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென் கொரிய அணியைத் தோற்கடித்தது.