Home செய்திகள் உலக செய்திகள் “அடுத்த ஆண்டு இந்தியா வருகிறார் ட்ரம்ப்”

“அடுத்த ஆண்டு இந்தியா வருகிறார் ட்ரம்ப்”

வாஷிங்டன், ஜூன் 27- அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவுக்கு வர உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியதாவது: அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அதிபரின் இந்திய பயணம் கைகூடும் என நாங்கள் நம்புகிறோம். நிச்சயம் அதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தியா, அமெரிக்க தேசத்தின் நெருங்கிய நட்பு நாடுகளின் வட்டத்தில் உள்ளது. பிரதமருக்கும், அதிபருக்கும் இடையிலான நட்பு மிகவும் நெருக்கமானது. இது அரசாங்க ரீதியாக மிகவும் முக்கியம் எனக் கருதுகிறேன் என்று ரூபியோ தெரிவித்துள்ளார். கடைசியாக கடந்த 2020 பிப்ரவரியில் ட்ரம்ப், இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அகமதாபாத் நகரில் ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்வில் பிரதமர் மோடி உடன் அவர் பங்கேற்றார். தொடர்ந்து டெல்லியில் இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். வர்த்தக ஒப்பந்தம் இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்தார். அமெரிக்க பிரதிநிதிகளுடன் டெல்லியில் நடத்திய 2 நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் தகவலை அமைச்சர் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2-வது முறை​யாக பதவி​யேற்ற பின், உலக நாடு​களுக்​குப் பரஸ்பர வரி​வி​திப்பு முறையை கொண்டு வந்​தார். அமெரிக்க பொருட்​களுக்கு இந்​தியா போன்ற நாடு​கள் 100 சதவீதத்​துக்​கும் அதி​க​மாக வரி விதிப்​ப​தாக அதிபர் ட்ரம்ப் குற்​றம் சாட்​டி​னார்.