Home Uncategorized கூகுள் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்

கூகுள் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம்

புதுடெல்லி: ஜூலை 2-
இந்திய சுற்றுலாத் துறையை மேம்படுத்த கூகுள் இந்தியா நிறுவனத்துடன் மத்திய சுற் றுலாத் துறை அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இதன் மூலம் மத்திய அரசின் சுற்றுலா தொடர்பான விளம்பர முன்முயற்சிகளையும் தொழில்நுட்ப நிறுவனத்தின் டிஜிட்டல் திறன்களையும் ஒன் றிணைக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. பன்னாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கவும், போட்டி நிறைந்த உலகளாவிய சுற்றுலா சந்தையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தவும் இந்த கூட்டுமுயற்சி உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுற்றுலாத் தலங்களின் இடங்களை டிஜிட்டல் தளங்களில் மேம்படுத்துவதும் பயண போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பங் களை தொழில்நுட்பம் மூலம் நன்கு தெரிந்து கொள்வதும் இதன் முக்கிய குறிக்கோள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தியாவின் பண்பாட்டு மற்றும் வரலாற்று முக்கியத்து வத்தை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்துவதில் டிஜிட்டல் அமைப்பு முக்கியப் பங் காற்ற முடியும் என சுற்றுலா துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.
கூகுள் தளங்கள் மூலம் கிடைக் கும் தரவு பகுப்பாய்வுகள் உலகளாவிய பயண போக்குவரத் துகள் ஆன்லைன் தொடர்பான பயன்பாடுகள் மற்றும் வளர்ந்து வரும் சுற்றுலா தொடர்பான விஷயங்கள் ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஒப்பந்தத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங், தேவையான தகவல்களை உருவாக் குதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து சுற்றுலா அமைச்சக அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டங்களும் உள்ளன.