Home செய்திகள் தேசிய செய்திகள் அமர்நாத் யாத்திரை – கொடியசைத்து துவக்கி வைத்தார் கவர்னர்

அமர்நாத் யாத்திரை – கொடியசைத்து துவக்கி வைத்தார் கவர்னர்

ஜம்மு: ஜூலை 2-
இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரையை ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
57 நாட்கள் நீடிக்கும் இந்த புனிதப் பயணம், அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய 48 கி.மீ., நீளமுள்ள நுன்வான்-பஹல்காம் வழித்தடத்திலும், காந்தர்பல் மாவட்டத்தில் உள்ள குறுகிய,செங்குத்தான 14 கி.மீ., நீளமுள்ள பால்டால் வழித்தடத்திலும் ஒரே நேரத்தில் தொடங்குகிறது. இந்த யாத்திரை ரக்ஷா பந்தன் பண்டிகையை ஒட்டி ஆகஸ்ட் 28ல் நிறைவடைகிறது.
இந்த நிலையில், அமர்நாத் யாத்திரையை ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பால்டால் மற்றும் பஹல்காம் ஆகிய இரு இடங்களில் உள்ள முகாம்களிலும் பக்தர்கள் பெருமளவில் திரண்டு ‘பம் பம் போலே’ என்று முழக்கமிட்டனர்.
யாத்திரை தொடங்குவதற்குக் சில மணி நேரங்களுக்கு முன்பு, உதம்பூரில் உள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் யாத்திரைக்கான ஆயத்தப் பணிகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக 137வது பட்டாலியனைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர்கள், மோப்ப நாய்) பிரிவினருடன் இணைந்து சோதனைகளை மேற்கொண்டனர்.