
மும்பை, ஜூலை 13- இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் காயமடைந்துள்ளதால் அவர்களுக்குப் பதிலாக அணியில் பிரின்ஸ் யாதவ், ரவி பிஷ்னோய் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் டி20, ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஹர்ஷித் ராணா காயம் அடைந்துள்ளார். அவருக்குப் பதிலாக தற்போது பிரின்ஸ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று தெரிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பிரின்ஸ் யாதவ் விளையாடுவார். அதேபோல் காயமடைந்துள்ள வருண் சக்ரவர்த்திக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் அணியில் இணைவார். அவர் ஜிம்பாப்வே அணிக்கெதிரான சர்வதேச டி20 தொடரில் வருணுக்குப் பதிலாக விளையாடுவார்.
















