Home செய்திகள் உலக செய்திகள் உமர் அப்துல்லா கேள்வி

உமர் அப்துல்லா கேள்வி

ஜம்மு, ஜூலை 13- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அல்லது வெள்ளை மாளிகையை அணுகினால் தான் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்குமா என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஒன்றிய அரசை கடுமையாக சாடியுள்ளார். ஜம்முவில் நடைபெற்ற பொது கூட்டம் ஒன்றில் பேசிய ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, “நமது சொந்த நாட்டின் தலைநகரில் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கவில்லை என்றால், நாங்கள் வெள்ளை மாளிகையில் உள்ள டிரம்ப்பிடமா செல்ல வேண்டும்.!!” என்று கேள்வி எழுப்பி பா.ஜ.க அரசை கிண்டல் செய்து உள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோடி அதன் முதல்வர் உமர் அப்துல்லா டெல்லியில் ஒரு பெரிய போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளார்.