
புதுடெல்லி: ஜூலை 13-
உலகளாவிய செல்வ அறிக்கையை 2026 யுபிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில் கூறியிருப்பதாவது: “கடந்த 2025-ல் இந்தியா 31,033 புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. இது சீனாவின் புதிய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையான 14,079-ஐ விட 2 மடங்கு அதிகம். இந்தியர்கள் பணக்காரர்களாக மாறினாலும், அவர்கள் மேற்கத்திய நாடுகளைப் போல தங்கள் செல்வத்தைச் சேமித்து வைப்பதில்லை.
இந்தியாவின் மொத்த தனி நபர் செல்வத்தில் வெறும் 25.8 % மட்டுமே நிதிச் சொத்துகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் 78.9 %, ஜப்பானில் 68.9 %, தென் கொரியாவில் 54.9 % மற்றும் சீனாவில் 51.9 % ஆக உள்ளது. இந்த கணக்கெடுப்பில் இந்தியா, பட்டியலின் மிகக் கடைசி இடத்தில் உள்ளது.
சீனாவில் மொத்தம் 53 லட்சத்துக்கும் அதிகமான கோடீஸ்வரர்கள் உள்ளனர். இந்தியாவில் இந்த எண்ணிக்கை 9,44,000 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


















