Home மாவட்டங்கள் பெங்களூர் 2031-ல் ஆட்சியை பிடிப்போம்

2031-ல் ஆட்சியை பிடிப்போம்

பொள்​ளாச்சி: ஜூலை 13-
‘வீ த லீடர்​ஸ்’ அமைப்பு விரை​வில் அரசி​யல் கட்​சி​யாக மாறும். 2031-ல் தமிழகத்​தில் ஆட்​சியை பிடிப்​போம் என, பொள்​ளாச்​சி​யில் நடந்த மாநாட்​டில் அண்​ணா​மலை பேசி​னார்.
தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை தொடங்​கி​யுள்ள ‘வீ த லீடர்​ஸ்’ இயக்​கத்​தின் முதல் மாநாடு பொள்​ளாச்​சி​யில் நேற்று நடை​பெற்​றது. அமைப்​பின் தலைமை வழி​காட்​டி​யான அண்​ணா​மலை பேசி​ய​தாவது:
பொள்​ளாச்சி மண்​ணில் பெரிய எதிர்​பார்ப்​போடும் நம்​பிக்​கையோடும் எல்​லோரும் நின்று கொண்டு உள்​ளோம். இது ஒரு மாவட்​டத்​தில் ஒரு போதை ஒழிப்பு மாநாடுதான், உங்​கள் நம்​பிக்​கையை பார்க்​கும் போது எல்லா பக்​கமிருந்​தும் வந்​திருக்​கின்​றனர். இங்கு இருக்​கின்ற தன்​னார்​வலர் ஒரு​வரின் தந்தை தற்​பொழுது தான் உயி​ரிழந்​தார். அவர் குடிப்​பழக்​கத்​திற்கு உள்​ளானவர். அதை​யும் தாங்​கிக்​கொண்டு போதைக்கு எதி​ராக அந்த தன்​னார்​வலர் இங்கு நின்று கொண்​டுள்​ளார். போதைக்கு எதி​ராக வலு​வாக உள்​ளோம்.
38 நாளில் 19 லட்​சம் பேர் உறுப்​பின​ராக சேர்ந்​துள்​ளனர். தமிழகத்​தில் நல்​ல​வர்​கள் இருக்​கிறார்​கள், வாய்ப்​புக்​காக காத்​திருக்​கிறார்​கள். இந்த இயக்​கம் எனது குடும்​பத்​திற்கு சொந்​த​மானது கிடை​யாது, உங்​களுக்​கானது. இந்த அமைப்பை பொறுத்​தவரை நானும் ஒரு தன்​னார்​வலர் தான். இந்த இயக்​கத்​தின் உறுப்​பினர்​கள் 50 லட்​சத்தை எட்​டும் போது நிரந்​தர​மாக ஒரு நல்ல சமூகம் உரு​வாகும். சுற்​றுச்​சூழலை பாது​காக்க 50 லட்​சம் மரக்​கன்​றுகளை நட உள்​ளோம்.
ஆறு மாதம் இலக்கு வைத்​துள்​ளோம். செப்​டம்​பர் மாதம் பெண்​கள் பாது​காப்பு குறித்​தும், அக்​டோபர் மாதம் குழந்​தைகள் நலன் என ஆறு மாதங்​களில் ஆறு முக்​கிய பிரச்​சினை​களை எடுத்து தீர்வு காண உள்​ளோம்​. ‘வீ த லீடர்’ அமைப்​பில் 17 சதவீதம் மகளிர் இருக்​கிறார்​கள். இன்​னும் அதி​க​மாக வேண்​டும். 2031 ல் ஆட்சி மாற்​றம் ஏற்​படும், ஆறு மாதங்​கள் முழு​மை​யாக சமூக பணி செய்​வோம். மக்​கள் நம்​மிடம் வரு​வார்​கள்.