
ஹாசன்: ஜூலை 13-
ஹொலேநரசிபுரா தாலுகா கபூர் கிராமம் அருகே ஸ்கூட்டரில் வந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை ஹள்ளிமைசூரு போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகா மேலூரைச் சேர்ந்த ஷீலா என்பவரே கைது செய்யப்பட்ட குற்றவாளி ஆவார். அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சா, ஒரு ஸ்கூட்டி மற்றும் ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரகசிய தகவலின் பேரில் ஹள்ளிமைசூரு போலீஸார் கட்டூர் அருகே அதிரடி வேட்டை நடத்தினர். அப்போது இந்த பெண் ஸ்கூட்டரில் வந்து கஞ்சா விற்க முயன்றதும், மற்றொரு நபர் காரில் வந்து கஞ்சா விற்க முயன்றதும் தெரியவந்தது. போலீஸாரைக் கண்டதும் ஜபீர் என்ற மற்றொரு குற்றவாளி காரை சம்பவ இடத்திலேயே போட்டுவிட்டு தப்பியோடினார்.அங்கிருந்த ஷீலாவை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். தப்பியோடிய ஜபீரை போலீஸார் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.


















