
புதுடெல்லி: ஜூலை 18-
அமைப்பு சாரா ஊழியர்கள், சுயவேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கும் இனி வருங்கால வைப்பு நிதித்திட்டத்தில் (பிஎஃப்) பணம் பங்களிப்பு செய்யும் வசதி விரைவில் அமலுக்கு வரவுள்ளது.
அமைப்பு சாரா தொழிலாளர்கள், சுயவேலைவாய்ப்பு பெறுபவர்கள், கிக் தொழிலாளர்கள், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(இபிஎஃப்ஓ) புதிதாக பிஎஃப் திட்டத்தைத் தயார் செய்து வருகிறது. புதிய திட்டம் அமலுக்கு வரும்போது இந்தத் தொழிலாளர்களும் பிஎஃப் திட்டத்தில் சேர்ந்து ஓய்வூதியம் உள்ளிட்ட பயன்களைப் பெற முடியும்.
ந்தத் திட்டத்தில் சேரும் தொழிலாளர்களுக்கு பணம் பிடித்தம் செய்யப்படுவது தற்போதைய இபிஎஃப்ஓ மாதிரியைப் பின்பற்றியே அமையும். இதில் சேரும் புதிய சந்தாதாரர்கள் தினசரி அல்லது ஆண்டுதோறும் நிதி பங்களிப்புச் செய்யும் வசதியைப் பெறுவர். இவர்கள் சார்பில் சேமிக்கப்படும் தொகைக்கு வட்டி மற்றும் வரிச் சலுகைகளும் கிடைக்கும். அதாவது, ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரையிலான பங்களிப்புக்கும், அதற்கான வட்டிக்கும் முழுமையான வரி விலக்கு அளிக்கப்படும்.













