Home விளையாட்டு ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் ‘பிக் 4’

ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் ‘பிக் 4’

பிரிஸ்பன், ஜூலை 22- வங்கதேச கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்​றுப்​பயணம் செய்து 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. இதன் முதல் போட்டி ஆகஸ்ட் 13 முதல் 17 வரை டார்​வின் நகரிலும், 2-வது மற்​றும் கடைசி டெஸ் போட்டி ஆகஸ்ட் 22 முதல் 26 வரை குயின்​ஸ்​லாந்​தில் உள்ள மேக்கே நகரில் நடை​பெறுகிறது. இந்த தொடருக்​கான ஆஸ்​திரேலிய அணி நேற்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் ‘பிக் 4’ என்று அழைக்​கப்​படும் அணி​யின் சீனியர் நட்​சத்​திரங்​களான கேப்​டன் பாட் கம்​மின்​ஸ், ஜோஷ் ஹேசில்​வுட், மிட்​செல் ஸ்டார்க், நேதன் லயன் ஆகியோர் காயங்​களில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பி உள்​ளனர். இந்​தத் தொடருடன் ஆஸ்​திரேலிய அணி அடுத்த 12 மாதங்​களில் தென் ஆப்​பிரிக்​கா, இந்​தி​யா, இங்​கிலாந்து சுற்​றுப்​பயணங்​கள் உட்பட 20 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாட உள்​ளது. அணி விவரம்: பாட் கம்​மின்ஸ் (கேப்​டன்), டிரா​விஸ் ஹெட், ஜேக் வெத​ரால்​டு, ஸ்டீவ் ஸ்மித், மார்​னஷ் லபுஷேன், ஜோஷ் இங்​லிஷ், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பியூ வெப்​ஸ்​டர், நேதன் லயன், மிட்​செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்​வுட்​, ஸ்காட்​ போலண்ட்​.