Home செய்திகள் உலக செய்திகள் மொராக்கோ மக்கள் உயிரைப் பணயம் வைத்து ஸ்பெயினுக்குள் ‘நுழைவது’ ஏன்?

மொராக்கோ மக்கள் உயிரைப் பணயம் வைத்து ஸ்பெயினுக்குள் ‘நுழைவது’ ஏன்?

மாட்ரிட், ஆக. 1- ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தில் அமைந்​துள்ள ஸ்பெ​யினும், ஆப்பிரிக்க கண்​டத்​தில் உள்ள மொராக்கோ நாடும் அரு​கருகே அமைந்​துள்​ளன. ஸ்பெ​யினில் உள்ள சியூட்டா தான் மொராக்கோவுக்கு அரு​கிலுள்ள எல்​லைப் பகு​தி​யாகும். முஸ்​லிம் நாடான மொராக்​கா​வில் வறுமை, வேலை​யின்மை போன்​றவை காரண​மாக ஏராளமானோர் புலம்​பெயர்ந்து ஸ்பெயினுக்​குள் ஊடுருவ முயற்​சிக்கின்​றனர். கடந்த ஒரு வார​மாக மொராக்கோ நாட்டு மக்​கள் அத்​து​மீறி ஸ்பெ​யினுக்​குள் நுழைந்து வரு​கின்​றனர். ஆனால், மொராக்கோ மக்களை உடனடி​யாக திருப்பி அனுப்​பக் கூடாது என்று ஸ்பெ​யின் உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ள​தால் ஸ்பெ​யின் அரசால் நடவடிக்கை எடுக்க முடிய​வில்​லை. இதனிடையே, மொராக்கோ நாட்​டின் ஃபனிடெக், பெலியூன் மற்​றும் அதைச் சுற்​றி​யுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 70,000 பேர் நேற்​று​ முன்​தினம் தரை மற்​றும் கடல் வழி​யாக ஸ்பெ​யின் எல்லையான சியூட்​டாவை நோக்கி ஒரே நாளில் குவிந்​து​விட்​டனர். போலீ​ஸாரின் கட்​டுப்​பாட்டையும் மீறி அவர்​கள் கடல்​வழி​யாக நுழைந்​தனர். நிலை​மை​யைக் கட்​டுப்​படுத்த ஸ்பெ​யின் அரசு எல்​லைப் பகு​தி​யில் ராணுவ வீரர்​களை​யும், போலீ​ஸாரையும் அதிக அளவில் குவித்​திருந்​தது. ஸ்பெ​யின் எல்​லைக்​குள் வரும் மொராக்கோ மக்​கள் மீது தண்​ணீரைப் பீய்ச்​சி​யடித்து போலீ​ஸார் விரட்ட முயன்​றனர். இருந்​த​போதும் 64 ஆயிரத்துக்​கும் அதி​க​மானோர் சியூட்டா எல்​லை​யைக் கடந்து ஸ்பெ​யினுக்குள் சென்றுவிட்​ட​தாக ஸ்பெ​யின் நாட்​டின் உள்​துறை அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது. இந்த சம்​பவத்​தின்​போது ஏற்​பட்ட தள்​ளு​முள்​ளு, நெரிசல், கடல் நீரில் மூழ்​கியது போன்ற காரணங்​களால் மொராக்​கோவைச் சேர்ந்த 41 பேர் உயி​ரிழந்து விட்​டனர். உயி​ரிழந்​தவர்​களின் சடலங்​களை போலீ​ஸார் மீட்டு மருத்​து​வ​மனை​களுக்கு அனுப்​பி​யுள்​ளனர். மேலும், மொராக்​கோ​வில் இருந்து சியூட்டா வழி​யாக ஸ்பெ​யினுக்​குள் நுழைவதைத் தடுக்க ஸ்பெ​யின் அரசு தீவிரகண்​காணிப்பை ஏற்​படுத்திஉள்​ளது. எல்​லைப்​பகு​தி​யில் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது. சியூட்டா பகு​தியை நோக்​கி வரும்​ மக்​களைத்​ தடுக்​க​வும்​ ஏற்​பாடுகள்​ செய்​யப்​பட்​டுள்​ளன. மொராக்கோவில் அதிகரித்து வரும் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் வறுமை ஆகியவையே இதற்கான முதன்மை காரணங்களாக கருதப்படுகின்றன. அந்நாட்டில் இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் 35 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. போதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காத சூழலிலும், நாட்டின் பொருளாதாரத் தேக்கநிலையிலும் விரக்தியடையும் இளைஞர்கள், சிறந்த வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தைத் தேடி ஐரோப்பாவை நோக்கிப் பயணிக்கத் துணிகின்றனர்.