
புதுடில்லி, ஆகஸ்ட் 4 – காமன்வெல்த் விளையாட்டில் இம்முறை குத்துச்சண்டையில் தான் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. 7 தங்கம் உட்பட 10 பதக்கம் வென்று அசத்தியது. பளுதுாக்குதலில் மீராபாய் சானு ‘ஹாட்ரிக்’ தங்கம் வென்று சாதனை படைத்தனர். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 23வது காமன்வெல்த் விளையாட்டு நடந்தது. இந்தியா சார்பில் 122 பேர் பங்கேற்றனர். மொத்தம் 39 பதக்கம் (13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம்) வென்றனர். வெற்றி சதவீதம் 31 ஆக அமைந்தது. இது இது 2022 செயல்பாட்டினை விட அதிகம். கடந்த முறை 210 பேர் பங்கேற்று, 29 சதவீதத்தினர் தான் பதக்கம் (மொத்தம் 61) வென்றிருந்தனர். தவிர, இம்முறை 10 விளையாட்டுகள் மட்டுமே இடம் பெற்ற நிலையில், இந்திய நட்சத்திரங்கள் செயல்பாடு சிறப்பாகவே இருந்தன. காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவின் 11 பாரா நட்சத்திரங்களில் (மாற்றுத் திறனாளிகள்) 6 பேர் பதக்கம் வென்றது, இம்முறை ‘ஸ்பெஷலாக’ அமைந்தது. வலது கை பாதிக்கப்பட்ட திலிப் காவிட் (100 மீ.,), வலது கால் செயல் இழந்த சோமன் (குண்டு எறிதல்), குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஷர்மிளா (குண்டு எறிதல்) என 3 பேர் தங்கம் வென்றனர். 3 போட்டியில் மட்டும் 6 பதக்கங்கள் கிடைத்தன. இம்முறை 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என, 7 பதக்கம் கிடைத்தன. கடந்த 6 சீசனில் (2002-2022) ‘பாரா’ போட்டியில் இந்தியாவுக்கு மொத்தமே 7 பதக்கம் (1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) தான் கிடைத்து இருந்தன. ஏழு தங்கம்கு த்துச்சண்டையில் ஜாஸ்மின், சாக்சி, பிரீத்தி, சச்சின் உட்பட 7 பேர் தங்கம் வென்றனர். லவ்லினா உட்பட 3 பேர், வெள்ளி வென்றனர். மொத்தம் 10 பதக்கம் கிடைத்தது. காமன்வெல்த் குத்துச்சண்டை வரலாற்றில், 22 சீசனில் இந்தியாவுக்கு 11 தங்கம் மட்டும் கிடைத்தன. இம்முறை ஒரே சீசனில் 7 தங்கம் கைப்பற்றியது இந்தியா. பளுதுாக்குதலில் 1 தங்கம், 6 வெள்ளி,1 வெண்கலம் என 8 பதக்கம் கிடைத்தது. எதிர்பார்த்தபடி, மீராபாய் சானு, ‘ஹாட்ரிக்’ தங்கம் வென்றார். அஸ்மிதா அபாரம்ஜூ டோவில் அசத்திய அஸ்மிதா, காமன்வெல்த் வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார். மொத்தம் 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கம் கிடைத்தன. பாரா ‘பவர் லிப்டிங்கில்’ ஜண்டு குமார் மட்டும் பதக்கம் (வெண்கலம்) வென்று ஆறுதல் தந்தார்.
















