Home விளையாட்டு விவசாயக் குடும்​பத்​தில் இருந்து வெற்றிகரமான விளையாட்டு வீரர்!

விவசாயக் குடும்​பத்​தில் இருந்து வெற்றிகரமான விளையாட்டு வீரர்!

சென்னை, ஆக, 3- ஏழ்​மை​யான விவ​சாயக் குடும்​பத்​திலிருந்து இன்று வெற்றிகரமான விளை​யாட்டு வீர​ராக மாறி​யிருக்​கிறார் இந்​திய தடகள வீரர் பிரவீன் சித்ரவேல். அவரது எழுச்​சிமிகு வெற்​றிப் பயணம் இளைய தலை​முறைக்கு உத்​வேக​மான பாட​மாக மாறியுள்​ளது. ஸ்காட்​லாந்​தின் கிளாஸ்​கோ​வில் நடை​பெற்று வரும் காமன்வெல்த் விளை​யாட்​டுப் போட்​டி​யின் டிரிப்​பிள் ஜம்ப்​பில் (மும்​முறைத் தாண்​டு​தல்) இந்​தி​யா​வின் சார்​பில் பங்​கேற்ற பிரவீன் சித்ரவேல் வெள்​ளிப் பதக்​கத்தை வென்று இந்​திய தேசியக் கொடியை சர்​வ​தேச அரங்​கில் பறக்​க​விட்டு பெருமை சேர்த்துள்ளார். இவர் தமிழகத்​தின் திரு​வாரூர் மன்​னார்​குடிக்கு அரு​கிலுள்ள செட்டிசத்​திரம் பகு​தி​யைச் சேர்ந்​தவர். ஏழ்​மை​யான விவ​சாயக் குடும்​பத்​தில் பிறந்த பிர​வீன் சித்​ர​வேல் இன்று சர்​வ​தேச விளையாட்டு அரங்​கில் ஜொலிக்​கும் நட்​சத்​திர​மாக மாறியுள்ளார். மேலும் இளம் தலை​முறை​யினருக்கு முன்​னு​தா​ரண​மாகத் திகழ்​கிறார். கிளாஸ்கோ காமன்​வெல்த் போட்​டி​யில் பதக்​கம் வென்​றது குறித்து பிர​வீன் சித்​ர​வேல் கூறிய​தாவது: கடந்த 2022-ல் நடை​பெற்ற காமன்​வெல்த் போட்​டி​யின்​போது 2 செ.மீ. வித்​தி​யாசத்​தில் பதக்க வாய்ப்பை இழந்​தேன். அது என்னை உறுத்​திக் கொண்டே இருந்​தது. இந்​த​முறை அதிதீ​விரப் பயிற்​சி​யுடன் களமிறங்​கினேன். திறம்பட செயல்​பட்டு வெள்​ளிப் பதக்​கத்தை வென்​றுள்​ளது மகிழ்ச்​சி. நான் மிக​வும் ஏழ்​மை​யான விவ​சாயக் குடும்பத்திலிருந்து விளை​யாட்​டுத் துறைக்கு வந்​தேன். எனது தந்தை சித்​ர​வேல், விவ​சாய தினக்​கூலி தொழிலா​ளி. என்னை மிக​வும் கஷ்டப்​பட்டு படிக்க வைத்​து, விளையாட்டுத்துறைக்கு அனுப்​பி​னார். கிளாஸ்கோ போட்​டி​யின்​போது நான் அதிக அழுத்​தத்தை மனதில் ஏற்​றிக்​கொள்​ள​வில்​லை. கிளாஸ்​கோ​வில் கடும் குளிர் நில​வியது. உடலை அசைப்​பதே கடின​மாக இருந்​தது. இருப்​பினும் என்​னுடைய சிறந்த செயல்​திறனை வெளிப்​படுத்த வேண்​டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன். அதன்​படியே செயல்​பட்டு பதக்​கத்​தைக் கைப்​பற்​றினேன். தற்​போது என்​னுடைய அடுத்த இலக்கு ஜப்​பானில் செப்​டம்​பர் 19 முதல் அக்​டோபர் 4-ம் தேதி வரை நடை​பெறவுள்ள ஆசிய விளையாட்​டுப் போட்​டி​தான். இந்​தப் போட்​டி​யில் பதக்​கம் வெல்​ல​வேண்​டும் என்​ப​தற்​காக பயிற்சி எடுத்து வரு​கிறேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். பிர​வீனின் தந்தை சித்​ர​வேல் கூறும்​போது, “நான் ஒரு விவ​சாய தினக்​கூலித் தொழிலா​ளி. ஆரம்ப காலத்​தில் மிக​வும் கஷ்டப்பட்டோம். பயிற்சி நாட்​களில் நான் எனது மகனை என் மிதிவண்​டி​யில் அழைத்​துச் செல்​வேன். சிறிது சிறி​தாக முன்​னேறி இன்று சர்​வ​தேச அளவில் பதக்​கம் வெல்​லும் நிலைக்கு அவர் சென்​றுள்​ளார்.