Home செய்திகள் தேசிய செய்திகள் யுபிஐ சேவை இலவசமாகவே தொடரும்: நிதியமைச்சகம் விளக்கம்

யுபிஐ சேவை இலவசமாகவே தொடரும்: நிதியமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி, ஆக. 9- பொது​மக்​களின் அன்​றாட யுபிஐ டிஜிட்​டல் பணப் பரிவர்த்​தனை​களுக்கு எந்​த​வித கட்​ட​ண​மும் வசூலிக்​கப்​ப​டாது என்று மத்​திய அரசு விளக்​கம் அளித்​துள்​ளது. மத்​திய அரசு அறி​முகப்​படுத்​தி​யுள்ள ‘வரி மற்​றும் பிற சட்​டங்​கள் திருத்த மசோதா 2026’ மக்​களவை​யில் நேற்று முன்​தினம் நிறைவேற்​றப்​பட்​டது. இது பொது​மக்​கள் மற்​றும் சிறு வணி​கர்​களைப் பாதிக்​கும் என்று எதிர்க்​கட்​சிகள் குற்​றம்​சாட்டி வந்​தன. இதுதொடர்​பாக மத்​திய நிதி​யமைச்​சகம் வெளி​யிட்​டுள்ள செய்திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: ஒரு நபர் யுபிஐ மூலம் இன்​னொரு நபருக்கு (பர்​சன்​-டூ-பர்​சன்)) பணம் பரிவர்த்​தனை செய்​யும்​போது எந்​த​விதக் கட்​ட​ண​மும் வசூலிக்​கப்பட மாட்​டாது. இவ்​வாறு யுபிஐ பரிவர்த்​தனை செய்​யும் நபர்​களுக்கு இலவச சேவை தொடரும். பொது​மக்​களின் அன்​றாட யுபிஐ டிஜிட்​டல் பணப் பரிவர்த்​தனைக்கு கட்​ட​ணம் வசூலிக்​கப்​ப​டாது. வணி​கர் தள்​ளு​படி விகித (எம்​டிஆர்) கட்​ட​ணம் நுகர்​வோருக்​கானது அல்ல. ஆண்​டுக்கு ரூ. 1 கோடிக்​கும் அதி​க​மாகப் பரிவர்த்​தனை மேற்​கொள்​ளும் பெரிய அளவி​லான வணி​கர்​களிடம் மட்​டுமே குறிப்​பிட்ட குறைந்​த​பட்​சக் கட்​ட​ணம் விதிப்​பது குறித்து தற்​போது பரிசீலிக்​கப்​பட்டு வரு​கிறது.நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் இந்த மசோதா முழு​மை​யாக நிறைவேறிய பிறகே இதுதொடர்​பான இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.